இந்தியாவில் 3 குழந்தைகளுக்கு மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) பதிவாகி உள்ளது.
கோவிட் தொற்றை தொடர்ந்து தற்போது சீனாவில் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) தொற்று அதிகமாக பரவி வருகிறது. கொரோனாவை போன்றே இந்த வைரசால் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.
சீனாவின் வடக்கு மாகாணங்களில் இந்த வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது.
இதனால் மக்கள் அச்சமடைந்த நிலையில், HMPV வைரஸ் தொற்று பரவல் குறித்து இந்தியர்கள் அச்சப்பட தேவையில்லை என பொது சுகாதார இயக்குநரகம் தெரிவித்தது. தொடர்ந்து சுகாதார இயக்குநரகம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் இந்தியாவில் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
பெங்களூருவை சேர்ந்த 8 மாத குழந்தைக்கு HMPV தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குழந்தை எங்கும் அழைத்துச் செல்லப்படாதபோதிலும் வைரஸ் பாதிப்பு எப்படி ஏற்பட்டது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. HMPV வைரஸ் பாதிப்பை உறுதி செய்த தனியார் மருத்துவமனை அறிக்கையை, கர்நாடக மாநில சுகாதரத்துறையும் உறுதி செய்துள்ளது.
குஜராத்தின் அகமதாபாத்திலும் 2 மாத குழந்தைக்கு HMPV தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னரே கர்நாடகாவில் 3 மாத குழுந்தைக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட மற்ற 2 குழந்தைகள் கண்காணிப்பில் உள்ளதாகவும், மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.