தி செம்மொழி

No# 1 தமிழ்நாடு செய்தி இணையதளம்

January 22, 2025

No# 1 தமிழ்நாடு செய்தி இணையதளம்

January 22, 2025

No# 1 தமிழ்நாடு செய்தி இணையதளம்

துபாயில் புதிய ரேசிங் தொடக்கத்தில் விபத்து: காயமின்றி நலமுடன் அஜித்குமார்

 

நடிகர் அஜித்குமார், தனது புதிய மோட்டார் ரேசிங் நிறுவனத்துடன் துபாயில் நடைபெறும் ரேசிங் தொடக்கத்தில் பங்கேற்று வருகிறார். இந்த தொடர் ஜனவரி 9 முதல் 12 வரை நடைபெறுகிறது. மூன்று நாள் குவாலிபிகேஷன் சுற்றுகள் மற்றும் ஜனவரி 12ஆம் தேதி இறுதி சுற்றுடன் இத்தொடர் நிறைவடைகிறது.
இந்தத் தொடக்கத்தின் ஒரு பகுதியாக, அவரது குழு துபாயில் நேற்று பயிற்சிகளை தொடங்கியது. இன்று நடந்த பயிற்சியின் போது, அஜித் ஓட்டிய கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் அவர் எந்தவித காயங்களும் அடையவில்லை, ஆனால் கார் சேதமடைந்தது.
நெருங்கிய வட்டாரங்களின் தகவல்படி, விபத்தில் சேதமடைந்த காரை சீரமைத்து,  9 தேதிக்குள் மீண்டும் பங்கேற்கும் வகையில் தயாராக உள்ளது.
அஜித்குமார், தனது திரை உலக சாதனைகளுக்கு அப்பால் மோட்டார் ரேசிங் வீரராகவும் தனக்கென்றே ஒரு அடையாளத்தை உருவாக்கி வருகிறார். இவர் ஐரோப்பிய நாடுகளிலும் தனது அணியுடன் பல்வேறு போட்டிகளில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by The Semmozhi (@thesemmozhi)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *