தமிழன்
யாருக்கும் தாளாமல்
தாழ்த்தாமல் அடிமையாக இல்லாமல்
நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதே குறிக்கோள் என்று பேரறிஞர் அண்ணா வாழ்த்துகிறார்.
தமிழர்களுக்கு என இனம், பண்பாடு,கலாச்சாரம்,மொழி என உண்டு.
இத்தக சிறப்பு வாய்ந்த தமிழர்களுக்கு புதிய வண்ணம் படை ப்பதற்காக புது ஆண்டு மகிழ்ச்சி,கொண்டாட ஒரு திரு நாள் மற்றும் சூரிய பகவான் வழிபாடு செய்ய வேண்டும் என்ற நோக்கோடு செயல் படும் நாள் தான் தை திருநாள்.
தமிழ் புத்தாண்டு.
தமிழ் புத்தாண்டு தை? சித்திரை?
என்ற கேள்வி பழங்காலத்தில் இருந்தே எழுந்தது.
நற்றிணை, குறுந்தொகை,புறநானூறு,கலித்தொகை தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்ற கருத்தை சங்க இலக்கியம் மூலம் நாம் அனைவரும் அறிகிறோம்.
மேலும் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்ற கருத்தை சோமசுந்தர பாரதியார் முன் வைக்கிறார்.
தமிழர்களின் வாழ்வு புதுமை ஆக அடைய பெறுவது தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு ஆகும்
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்ற கருத்தை முதலாக வைத்தவர் தனித் தமிழ் இயக்கம் தொடங்கி மக்கள் மனதில் தமிழ் மூலம் தனியாக இடம் பிடித்தார் மறைமலை அடிகளார்.
சென்னை பச்சைய்பன் கல்லூரி
1921- ம் ஆண்டு ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது
அதில் கவிதை மூலம்
புரட்சி ஏற்படுத்திய
பாவேந்தர் பாரதிதாசன்,தமிழ் தென்றல் திரு. வி. க,
நாவலர் சோமசுந்தர பாரதியார்
மேலும் 50 பேர் உட்பட
கலந்து கொண்டனர்
கி. மு. 31 ஆண்டு திருவள்ளுவர் தினம் ஆக கொண்டாடப்படுகிறது
தை 2- ம் நாளை திருவள்ளுவர் தினம்.
அய்யா திருவள்ளுவர் மையமாக வைத்து சிறப்பை உணர்ந்து குமரியில் 133அடி
உயரத்தில் சிலை அமைத்து தை திருநாளில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட வேண்டும் என்று செம்மொழி என்ற பெருமையை தமிழுக்கு சேர்த்த கலைஞர் அவர்களுக்கு தமிழில் தனி இடம் உண்டு.
நன் நாளில்
அறுவடை முடிந்து வீடு சேரும்
சுபதினங்கள் கைக் கூடும்
மாடுகள் துள்ளி குதிக்க
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
ம. அறிவுச்சுடர் 🧡🧡🧡