காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி!
மறைந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தியின் 85வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள ராஜிவ் பவனில் அவரது சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தவெக தலைவர் விஜய் குறித்து கருத்து தெரிவிக்கையில், “தவெக தலைவர் விஜய் சமீபத்திய கட்சி மாநாட்டில் மதவாத சக்திகளுக்கு எதிராகத் தன்னுடைய நிலைப்பாட்டைத் தெளிவாக கூறினார். இந்தியாவின் ஒற்றுமையை காப்பாற்ற இந்துத்துவா சக்திகளை அகற்றுவது அவசியம். இதற்கு விஜய் இந்தியா கூட்டணியில் இணைந்தால் மிகவும் பொருத்தமானதாக இருக்கும். அவரது கொள்கைகளும், இந்த கூட்டணியின் நோக்கங்களும் ஒரே கோட்பாட்டில் இருக்கின்றன” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், செல்வப்பெருந்தகை, “இந்தியா கூட்டணி மதவாத சக்திகளை எதிர்த்துப் போராட ஒரு வலுவான மேடையாக இருக்கும். விஜயின் பங்களிப்பு இந்த முயற்சியில் முக்கியமானதாக இருக்கும்” எனக் கூறினார்.
Leave a Reply