ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – தேர்தல் அதிகாரி மாற்றம்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நடத்தும் அதிகாரி மணீஷ் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக புதிய தேர்தல் அலுவலராக ஸ்ரீகாந்த் நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் 14ந்தேதி உடல் நலக்குறைவால் இறந்தார். இதை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது
இதில் திமுக, நாதக உள்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பில் நாதகவும், திமுகவும் தீவிரமாக இறங்கியுள்ளது.
இந்நிலையில் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை நடத்தும் அதிகாரியாக இருந்த மணீஷ் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய தேர்தல் நடத்தும் அலுவலராக ஸ்ரீகாந்த் என்பவரை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வேட்பாளரின் வேட்பு மனு ஏற்கப்பட்ட விவகாரம் சர்ச்சையான நிலையில், ஈரோடு மாநகராட்சி ஆணையாளரும், தேர்தல் நடத்தும் அலுவலராக மணீஷ்-ஐ மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.