தி செம்மொழி

தமிழ் செய்தி இணையதளம்

January 31, 2026

No# 1 தமிழ்நாடு செய்தி இணையதளம்

January 31, 2026

தமிழ் செய்தி இணையதளம்

”இரும்பின் தொன்மை” கீழடி இணையதளத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இரும்பின் தொன்மை’ நூல் வெளியிடுதல், கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் கீழடி இணையதளத்தினைத் தொடங்கி வைத்தலுக்கான நிகழ்ச்சி சென்னை கோட்டூர் புரத்திலுள்ள அண்ணா நூற்றாண்டு கலையரங்கில் இன்று (ஜன.23) நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரை முருகன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 5914 சதுர மீட்டர் பரப்பளவில், ரூ. 17.10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள கீழடி திறந்தவெளி அருங்காட்சியம் மற்றும் 2325 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ. 22.10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியம் ஆகியவைகளுக்கான அடிக்கல்லை நாட்டினார்.

மேலும் ‘இரும்பின் தொன்மை’ என்ற நூலை வெளியிட்ட முதலமைச்சர், கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் எனும் இணையதளத்தை தொடங்கி வைத்தார். இந்த இணையதளத்தின் மூலம் கீழடியின் தொன்மைச் சிறப்பையும் வரலாற்றுப் பெருமையையும் அறிந்து கொள்ளலாம். மேலும், பல்துறை அணுகுமுறையோடு அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை நேரடியாக வந்து காண இயலாதவர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே 360 டிகிரியில் அருகாட்சியத்தை சுற்றிப்பார்பதற்கான வசதியும் இடம்பெற்றுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top