ஈசிஆர் சம்பவம்… கல்லூரி மாணவர்கள் உட்பட 5 பேர் கைது!

சென்னை ஈசிஆர் சாலையில் முட்டுக்காடு பகுதியில் நள்ளிரவு நடுரோட்டில் காரை நிறுத்திய இளைஞர்கள் மற்றொரு காரில் வந்த பெண்களை துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இச்சம்பவம் தெர்டர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. மேலும், பெண்கள் பயணித்த காரை இளைஞர்கள் சுற்றுவளைத்து தகராறில் ஈடுபடுவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அரசியல் கட்சித் தலைவர்கள் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்ததுடன் குற்றவாளிகளை விரைந்து பிடிக்கவேண்டும் என வலியுறுத்தி இருந்தனர். இதற்கிடையே, பெண்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காரில் பெண்களை துரத்தி சென்ற இளைஞர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெண்கள் சென்ற கார் இளைஞர்களின் காரை உரசி சென்றதாகவும், காரை நிறுத்தி நியாயம் கேட்கவே இளைஞர்கள் காரை துரத்தியதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் இளைஞர்களை தேடி வருகின்றனர்.

தொடர்பாக புலன் விசாரணை நடத்தப்பட்டு ஈசிஆர் சாலைகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருவதாக தாம்பரம் மாநகரல் காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. பெண்கள் சென்ற காரை துரத்திச் சென்ற இளைஞர்களின் இரண்டு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய சந்துரு என்ற கல்லூரி மாணவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரை ரகசிய இடத்தில் வைத்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், விடிய விடிய போலீசார் நடத்திய தீவிர சோதனையில் மேலும் நால்வரை போலீசார் கைது செய்துள்ளனர். இதன்மூலம் இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்துரு உள்ளிட்ட 7 பேர் பெண்களில் காரில் துரத்தியது தெரியவந்துள்ளது. ஈடுபட்ட போலீசார் விசாரணைக்கு பிறகு இச்சம்பவத்திற்கான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *