2025-26-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 8வது முறையாக நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திருக்குறளுடன் பட்ஜெட் உரையை வாசித்தார்.
அப்போது அவர், விவசாயம், மருத்துவம் உள்ளிட்ட துறைகளுக்கான திட்டங்களை அறிவித்தார். வரி குறைப்பு, வரி அதிகரிப்பு குறித்தும் அவர் அறிவித்தார். மேலும், எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்பது குறித்து அறிவித்தார். எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்பது குறித்து பார்க்கலாம்.
ஒன்றிய பட்ஜெட் 2025-26 | முக்கிய துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு எவ்வளவு?
🚂 போக்குவரத்து – ₹5.48 லட்சம் கோடி
🪖 பாதுகாப்பு – ₹4.91 லட்சம் கோடி
🌾 வேளாண் – ₹1.71 லட்சம் கோடி
🎒 கல்வி – ₹1.28 லட்சம் கோடி
👨🏻⚕ சுகாதாரம் – ₹98,311 கோடி
🚓 உள்துறை – ₹2.33 லட்சம் கோடி
🚧 ஊரக வளர்ச்சி – ₹2.66 லட்சம் கோடி
🏗 நகர்ப்புற வளர்ச்சி – ₹69,777 கோடி
👩🏻🍼 சமூக நலன் – ₹60,052 கோடி
Leave a Reply