தி செம்மொழி

தமிழ் செய்தி இணையதளம்

February 2, 2026

No# 1 தமிழ்நாடு செய்தி இணையதளம்

February 2, 2026

தமிழ் செய்தி இணையதளம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த டிச.14ம் தேதி காலமானார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இத்தொகுதிக்கான இடைத்தேர்தல்  பிப்ரவரி 5ஆம் தேதி (இன்று) நடைபெறும் என அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது.

இந்த தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன. திமுக மற்றும் நாதக கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து போட்டியிடுவதாக அறிவித்தனர். 53 வாக்குப்பதிவு மையத்தில் உள்ள 237 வாக்குச்சாவடியில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 433 வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் தேர்தல் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.

இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10ம் தேதி தொடங்கி 17ம் தேதியுடன் நிறைவடைந்தது. தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் பிரச்சாரம் ஓய்ந்தது. இந்த தேர்தலில் திமுக, நாதக உட்பட 46 பேர் களத்தில் உள்ளனர். வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில் துணை ராணுவ வீரர்கள், பட்டாலியன் போலீசார் மற்றும் போலீசார் என மொத்தம் 2,678 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். முன்னதாக தபால் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

இந்த நிலையில், இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு வாக்குப்பதிவு தொடங்கியது. ஆரம்பம் முதலே வாக்களர்கள் விறுவிறுப்பாக வாக்களித்து வருகின்றனர். இந்த தேர்தல் இன்று மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. தொடர்ந்து பிப்.8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. அன்றைய தினமே இந்த இடைத்தேர்தலில் வெற்றி யாருக்கு? என்பது தெரிய வரும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top