தி செம்மொழி

தமிழ் செய்தி இணையதளம்

December 17, 2025

No# 1 தமிழ்நாடு செய்தி இணையதளம்

December 17, 2025

தமிழ் செய்தி இணையதளம்

கள்ளச்சாராயத்தை ஒழிக்க கடுமையான நடவடிக்கை வேண்டும்” – #EPS வலியுறுத்தல்!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடை ஒன்றில் கள்ளச்சாரயம் விற்கப்படுவதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்த வீடியோ ஒன்றையும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,

“சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடை ஒன்றில் கள்ளச்சாரயம் விற்கப்படுவதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மரக்காணம் மரணங்களில் இருந்தோ, நாட்டையே உலுக்கிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணங்களில் இருந்தோ திமுக அரசு ஒரு பாடம் கூட கற்கவில்லையா? “போலீஸுக்கு பணம் கொடுத்து தான் விற்கிறோம்” என்று கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர் தைரியமாக சொல்லும் அளவிற்கு கள்ளச்சாராய விற்பனையை நிறுவனமயப் படுத்தியுள்ளது திமுக அரசு.

போதாக்குறைக்கு, “திமுக கட்சிக்காரர்” எனும் அடையாளம் வேறு. திமுகவினர் எந்த தவறு செய்தாலும் காவல்துறை கண்டுகொள்ளாதா? தமிழ்நாட்டில் நீங்கள் ஆட்சிக்கு வந்தது, உங்கள் கட்சி அடையாளத்தை லைசன்சாக பயன்படுத்தி, சகல குற்றங்களையும் திமுகவினர் செய்வதற்கு தானா?சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடை ஒன்றில் கள்ளச்சாரயம் விற்கப்படுவதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

மரக்காணம் மரணங்களில் இருந்தோ, நாட்டையே உலுக்கிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணங்களில் இருந்தோ இந்த ஸ்டாலின் மாடல் அரசு ஒரு பாடம் கூட கற்கவில்லையா?

உடனடியாக இந்த கள்ளச்சாராய விற்பனையில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்வதோடு, எந்தவித அரசியல் குறுக்கீடும் இன்றி அனைவர் மீதும் சட்ட நடவடிக்கையை உறுதிசெய்யவேண்டுமென திமுக அரசை வலியுறுத்துகிறேன். மேலும், தமிழ்நாடு முழுக்க கள்ளச்சாராயத்தை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வலியுறுத்துகிறேன்”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top