தி செம்மொழி

தமிழ் செய்தி இணையதளம்

February 2, 2026

No# 1 தமிழ்நாடு செய்தி இணையதளம்

February 2, 2026

தமிழ் செய்தி இணையதளம்

‘விடாமுயற்சி’ படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி!

 

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘துணிவு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் கைவசம் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு திரைப்படங்கள் உள்ளன. இதில் விடாமுயற்சி திரைப்படம் நாளை (பிப்.6) வெளியாகிறது.

 

இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். மேலும், இந்தப் படத்தில் அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை ஓம் பிரகாஷ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை என்.பி. ஸ்ரீகாந்த் மேற்கொண்டுள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

 

இந்த நிலையில், விடாமுயற்சி திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. முதல் காட்சியை காலை 9 மணிக்கு தொடங்கி கடைசி காட்சியை நள்ளிரவு 2 மணிக்குள் முடிக்க வேண்டும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் மட்டும் 5 காட்சிகள் திரையிடலாம் என அனுமதி வழங்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் கொண்டத்தில் உள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top