இன்ஸ்டாகிராம் சென்சிடிவ் கன்டென்ட் பிரச்சனை – பயனர்களுக்கு அதிர்ச்சி!

 

இன்று முழுவதும் இன்ஸ்டாகிராம் செயலியில், நாடு முழுவதும் பயனர்கள் அதிக அளவில்instagra சென்சிடிவ் மற்றும் கிராபிக் உள்ளடக்கங்களை காண்கிறார்கள். தங்கள் செயலியை திறந்தவுடன், ஒருவர் ஒருவரை தாக்கும் வீடியோக்கள், நிர்வாண காட்சிகள், துப்பாக்கி சூடுகள் போன்ற கோரமான காட்சிகள் அவர்களின் பீட்டில் காட்டப்படுவதாக பலர் புகாரளித்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம் இதில் வயது வரம்பு கட்டுப்பாடு உள்ளது எனக் காட்டினாலும், பெரும்பாலான பயனாளர்கள் இது எதிர்பாராத மாற்றமாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

இந்த பிரச்சினையைப் பற்றிய தகவலுக்காக இன்ஸ்டாகிராமின் தரப்பில் இருந்து தொடர்பு கொண்டபோது, இது

(“ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (AI)

“ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (AI) அல்காரிதத்தில் ஏற்பட்ட மாற்றம்” காரணமாக ஏற்பட்டதாகவும், இதை சரிசெய்ய தகவல் தொழில்நுட்பக் குழு தீவிரமாக பணியாற்றி வருவதாகவும் ஒரு அதிகாரி தெரிவித்தார்.

இந்நிலையில், பயனர்கள் ‘செட்டிங்ஸ்’ > ‘சென்சிடிவ் கன்டென்ட் கன்ட்ரோல்’ பகுதியில் சென்று தேவையான மாற்றங்களைச் செய்யலாம். மேலும், பிரச்சனை தொடருமானால், இன்ஸ்டாகிராம் ஆதரவை தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *