தமிழகத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் வரை! பள்ளிக் கல்வி துறை அதிரடி அறிவிப்பு!
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களின் தலைமைப் பண்பை வளர்க்கும் வகையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற பெயர்களில் மாணவர் குழுக்கள் அமைத்து மாணவர் தலைவர், மாணவ அமைச்சர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட சுற்றறிக்கையில்: தமிழகத்தில் அனைத்து விதமான பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களிடம் தலைமைப் பண்பை வளர்க்கும் வகையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் பெயர்களில் மாணவர் குழுக்கள் அமைத்து மாணவர் தலைவர் மற்றும் மாணவ அமைச்சர்கள் தேர்வு செய்யப்படுவர். இதன்மூலம் மாணவர்களிடம் அரசியல் அறிவு சார்ந்த அனுபவங்கள் மற்றும் ஆளுமைத் திறன் மேம்பட மாதிரி சட்டப்பேரவை, நாடாளுமன்றம் நடத்தப்படும். இதற்காக தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும். இந்தத் திட்டம் ரூ.2 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று தமிழக சட்டப்பேரவை அறிவிப்பு வெளியிடப்பட்டது.