டெமோஸ்தெனிஸ்!!
சிறந்த பேச்சாளர் சொற்களை அருவி போல் சொட்டுபவர்
சிறு வயதிலேயே அனுபவத்தை கற்று தேர்ந்தவர்.
அவருடைய பெயரை தன் மகனுக்கு வைத்து மகிழ்ந்தார் தந்தை ஜான் .
தன் மகன் பொது வாழ்வில்வாழ வேண்டும் சரித்திரத்தில் இடம் பெற வேண்டும்.
எல்லா தந்தை மார்களும் தன் பிள்ளைகளை மருத்துவராக ஆசிரியராக பொறியாளராக
வளம் வர நினைப்பார்கள். ஆனால் தன் பிள்ளை நாட்டை ஆள்பவராக
இருக்க வேண்டும் என்று நினைத்தார். காலங்கள் ஓடின!!!
மகனோ படிப்பை தொடர்ந்தான் உனக்கு இந்த வையகத்தை ஆள விருப்பமா?
என்று டெமோ ஸ்தெனிஸ் இடம் கேட்டார் தந்தை ஜான். நிச்சயமாக என்றான் டெமோ ஸ்தேனிஸ் .
அதற்கு அடிப்படை தேவை ஆளும் தன்மை. பேச்சு- பேச்சாளர். உனக்கு ஒரு பரிட்சை வைக்கிறேன்.
முதலில் உன் பெயரின் பொருள் என்ன என்று தெரியுமா???
ஜான் தெரியாது என்றான் டெமோச்தெனிஸ் அவர்தான் இப்புவியை பேச்சால் கவர்ந்தவர் பரிட்சைக்கு முன் ஒரு வாய்ப்பை உனக்கு தருகிறேன்
அவருடைய புத்தகம்,வரலாறு படித்து வா அவரை பற்றி பேசு.
டெமோஸ்தேணிஸ்
வரலாறை அறிந்தவன் அல்ல!
வரலாறை படைத்தவன்!!
தனை பற்றி நீ அறிந்தால் தான் மற்றவர்களை பற்றி நீ அறிய முடியும்.
தேமோதென்ஸ் பற்றி பேச டெமோ எஸ்தெனிஸ் தன் உரையை ஆரம்பித்தார்.
“நான் அவரின் பெருமை பற்றி பேச முன் வரவில்லை.
அவர் அடைந்த துயரங்கள்,துன்பங்கள், வேதனைகள் ஏராளம்!!
அதை நான் பேசுவதில் எனக்கோ ஒரு மனப்பான்மை தாராளம்;
பிறப்பில் பேச்சாற்றல் இல்லை.அவருக்கு கொஞ்சம் திக்குவாய் உண்டு..
சில ஒலிகளை மக்களின் ஒளியில்
உச்சரிக்க முடியாமலும் தடுமாறி வந்தார்.
அவருடைய பேச்சு பேசும் போதெல்லாம் நிந்திக்கபட்டது வைராக்கியம் கொண்டார்.
தன் உடைய வீட்டில் சுரங்க அறை ஒன்றை வடிவமைத்தார்,
யாருக்கும் தெரியாமல் தனது உரையை உரைத்து பயிற்சி பெற்றார்.
கண்ணாடி முன் நின்று அங்க அசைவுகளை வடிவமைத்து உடல் மொழியை கற்று கொண்டார்.
அரசியல் அரங்குகளில் கலந்து கொண்டு அறிவு உள்ளவர்களை தனது பேச்சால் ஓர் முன்னோடி அரசியல் பேச்சாளர் ஆக திகழ்ந்தார்.
அவர் கடந்து வந்த பாதையில் ஓர் இறுதி பயணத்தை எதிரிகளின் கை கூடாரத்தில் மாட்டி கொண்டு போது விச செடி ஒன்றை உண்டும் மாயித்துக் கொண்டார்.
உழைப்பிற்கும்,முயற்சிக்கும் குறியீடு டெமோ ஸ்தெனிஷ்.”
அவருடைய பெயரை நான் பெற்றேன் அளவுகடந்த மகிழ்ச்சி!!!