தவறு செய்தது அன்புமணி அல்ல; 35 வயதில் அவரை ஒன்றிய அமைச்சராக்கி நான்தான் தவறு செய்துவிட்டேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். தவறான ஆட்டத்தை தொடங்கி அடித்து ஆடத் தொடங்கியது அன்புமணிதான். ஒளிவு மறைவின்றி நடந்ததை அப்படியே வெளிப்படுத்த விரும்புகிறேன். புதுச்சேரி பொதுக்குழுவில் என்ன நடந்தது என்று உலகமே பார்த்தது: மேடை நாகரிகத்தை கடைபிடிக்காதது யார். அன்புமணியின் குற்றச்சாட்டு முழுக்க முழுக்க மக்களையும், கட்சியினரையும் திசை திருப்பும் செயல்.