தி செம்மொழி

தமிழ் செய்தி இணையதளம்

July 22, 2025

No# 1 தமிழ்நாடு செய்தி இணையதளம்

July 22, 2025

தமிழ் செய்தி இணையதளம்

லிலோ & ஸ்டிட்ச் – திரை விமர்சனம்

வால்ட் டிஸ்னியின் உருவாக்கத்தில் 2002ஆம் ஆண்டு அனிமேஷன் வடிவில் வெளியான “லிலோ அண்ட் ஸ்டிட்ச்” தற்போது லைவ்-ஆக்‌ஷன் திரைப்படமாக வெளியாகி இருக்கிறது. கிரிஸ் சாண்டர்ஸ் மற்றும் டீன் டெப்ளாயிஸ் உருவாக்கிய கற்பனை கதையை இயக்கியிருக்கிறார் டீன் பிளஸ்சர் கேம்ப்.

அப்பா, அம்மாவை சிறுவயதிலேயே இழந்த குறும்புக்கார ஹவாய்ச் சிறுமி லிலோ ( டேவ் சேஸ்), அக்கா நானியின் ( டியா கர்ரே) வளர்ப்பில் வளர்கிறாள். கிடைத்த வேலையை பார்த்துக் கொண்டு படிப்பையும் தொடர முடியாமல் தனது சின்ன தங்கச்சியை வளர்க்கிறார் நானி ( டேவ் கார்ரே). இவர்களுக்கு பிரச்னையாக அரசாங்கத்தின் கண்காணிப்பு வேறு. எதையும் புரிந்து கொள்ளாமல் அக்காவின் பேச்சையும் கேட்காமல் அதீத தொல்லை கொடுக்கிறாள் லிலோ. இதற்கிடையில் டியூரோ என்னும் கிரகத்தில் 626 என்னும் பெயரில் வேற்று கிரகத்தை சார்ந்த விஞ்ஞானி ஒரு ஏலியன் உயிரினத்தை உருவாக்குகிறார். அது தவறுதலாக பூமிக்கு வந்து சேர்கிறது. பூமிக்கு வரும் 626ஐ நாய்க்குட்டி என நினைத்து வீட்டுக்கு கொண்டு வந்து அதற்கு ஸ்டிட்ச் ( கிரிஸ் சாண்டர்ஸ் (குரல்)) எனப் பெயரிட்டு செல்லப் பிராணியாக வளர்க்கிறாள் லிலோ. லிலோ மற்றும் நாணியின் நிலை என்ன ஆனது, ஸ்டிட்ச் மீண்டும் தனது கிரகத்திற்கு திரும்பியதா இல்லையா என்பது மீதிக்கதை.

படத்திற்கு மிகப்பெரிய பலம் கிராபிக்ஸ் டிசைனிங் தான். ஸ்டிட்ச் கதாபாத்திரம் , வெற்று கிரக ஏலியன்கள், அவைகளின் காமெடி கலாட்டாக்கள், என குழந்தைகளுக்கு சிறப்பான விருந்து. சிறுமி டேவ் சேஸ் நடிப்பில் அசத்தல். தம்மா துண்டு அளவில் இருந்து கொண்டு ஆச்சரியப்படுத்துகிறார். உடன் அக்கா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் டியா கார்ரே தவிப்பு, தன்னம்பிக்கை, தங்கையின் மீதான பாசம் என அருமையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். ஸாக் கலிஃபியானகிஸ் மற்றும் பில்லி மேக்னஸ்சென் காமெடி காம்போ கலக்கல்.

ஆலனின் இசை , நைஜெல் பிளக் ஒளிப்பதிவு , ஆடம் ஜெர்ஸ்டெல் மற்றும் பிலிப் ஜே. பார்டெல் எடிட்டிங் மூன்றும் இணைந்து 3டியில் விஷுவல் விருந்து படைக்கிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top