ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர் விக்ரம் சுகுமாரன். இவர் மறைந்த இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். கடந்த 1999 முதல் 2000 வரை வெளியான ‘கதை நேரம்’ மற்றும் 56 குறும்படங்கள், ‘ஜூலி கணபதி’ திரைப்படம் போன்றவற்றில் பாலு மகேந்திராவிடம் பணிபுரிந்தார். கடந்த 2013ம் கதிர், ஓவியா நடிப்பில் வெளியான மதயானைக் கூட்டம் படத்தின் முலம் விக்ரம் சுகுமாரன் இயக்குநராக அறிமுகமானார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த 2023ம் ஆண்டு தன் இரண்டாவது படமான ‘ராவண கோட்டம்’ படத்தை இயக்கினார்.
மேலும் இவர் ‘பொல்லாதவன்’, ‘கொடிவீரன்’ ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில் சாந்தனு ஹீரோவாக நடித்திருந்தார். இப்படத்தில் சமூகத்தில் நிலவும் சாதி மற்றும் அரசியல் பிரச்சனைகளை எடுத்துரைத்து பேசப்பட்டது. இந்த நிலையில், இயக்குநர் விக்ரம் சுகுமாரன் நேற்று (ஜுன் 1) இரவு மாரடைப்பால் காலமானார். மதுரையில் ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்லிவிட்டு, இரவு சென்னைக்கு பேருந்து ஏறும் போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவரைக் காப்பாற்ற முடியாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் அங்கு காலமானார். அவரது உடல் தற்போது சென்னைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.