தி செம்மொழி

தமிழ் செய்தி இணையதளம்

October 28, 2025

No# 1 தமிழ்நாடு செய்தி இணையதளம்

October 28, 2025

தமிழ் செய்தி இணையதளம்

டெல்லி – காஷ்மீர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் எப்போது தொடங்கப்படுகிறது? ரயில்வே துறை இணை அமைச்சர் ரவிநாத் சிங் விளக்கம்.

டெல்லி – காஷ்மீர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் எப்போது தொடங்கப்படுகிறது? ரயில்வே துறை இணை அமைச்சர் ரவிநாத் சிங் விளக்கம்.

வந்தே பாரத் ரயிலானது உதம்பூர்- ஸ்ரீநகர்- பாரமுல்லா போன்ற ரயில் இணைப்பில் (USBRL) இயக்கப்படும். இந்த ரயிலின் இயக்கத்தால் டெல்லி மற்றும் காஷ்மீர் இடையேயான பயண நேரம் குறையும்.

காஷ்மீர் மற்றும் டெல்லி இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை அடுத்த ஆண்டு ஜனவரியில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளதாக ரயில்வே துறை இணை அமைச்சர் ரவிநாத் சிங் சமீபத்தில் தெரிவித்துள்ளார். இந்த ரயிலானது பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிக்கு முக்கியமான வளர்ச்சியாக இருக்கும். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலானது உதம்பூர்- ஸ்ரீநகர்- பாரமுல்லா போன்ற ரயில் இணைப்பில் (USBRL) இயக்கப்படும். இந்த ரயிலின் இயக்கத்தால் டெல்லி மற்றும் காஷ்மீர் இடையேயான பயண நேரம் குறையும். மேலும் வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும்.

பாரத் எக்ஸ்பிரஸ்

சிறப்பு என்னவென்றால், இந்த ரயில் உலகின் மிக உயரமான மற்றும் அழகான இடமான செனாப் பாலத்தின் வழியாக செல்லும். இந்த பாலம் அதன் கட்டுமான உயரத்தால் ஒரு சிறப்பு ஈர்ப்பாக இருக்கும். மேலும் இந்த ரயில் பாதையானது பயணிகளை மேலும் உற்சாகப்படுத்தும். மொத்தமுள்ள 272 கிமீ USBRL ரயில் திட்டத்தில் ஏற்கனவே 255 கிமீ ரயில் பாதையை நிறைவு செய்துள்ளது. கத்ரா மற்றும் ரேசாய் இடையேயான மீதமுள்ள 17 கிலோமீட்டர் பாதை டிசம்பர் முதல் வாரத்தில் முடிக்கப்படும் என்றும், ரயிலின் சோதனை ஓட்டமானது டிசம்பர் 2வது வாரத்தில் இருந்து தொடங்கும் என்றும் ரயில்வே அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குளிர் காலத்தில் ஜம்மு காஷ்மீரில் பல சாலைகள் மூடப்படும். இதன் காரணமாக, காஷ்மீர் இணைப்புகள் முற்றிலும் பாதிக்கப்படும். இந்த நேரத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் பிற சாலைகள் மூடப்படும்போது, இந்த திட்டமானது பள்ளத்தாக்கு மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வந்தே பாரத் ரயில் ஜம்முவில் நிற்கும். இது மட்டுமின்றி, மாதா வைஷ்ணோ தேவி கோவில் அருகே உள்ள ரயில் நிலையத்திலும் நிறுத்தப்படும்.

இதனால் இந்த கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கும் இந்த ரயில் சேவை உதவும். டெல்லி முதல் காஷ்மீர் வரையிலான விலை ரூ.1,500 முதல் ரூ.2,100 வரை நிர்ணயிக்கப்படும் என்றும் ரயில்வே அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெல்லி – காஷ்மீர் வந்தே பாரத் விரைவு வண்டியில் 11 ஏசி 3 அடுக்குப் பெட்டிகள், நான்கு ஏசி 2 அடுக்கு பெட்டிகள் மற்றும் ஒரு முதல் ஏசி கோச் இருக்கும்.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top