தி செம்மொழி

தமிழ் செய்தி இணையதளம்

May 2, 2026

No# 1 தமிழ்நாடு செய்தி இணையதளம்

May 2, 2026

தமிழ் செய்தி இணையதளம்

முன்னாள் எஸ்.ஐ. மகேஸ்வரி சொத்துகளை முடக்க முடிவு!

சென்னை: சிறுவன் கடத்தல் வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் எஸ்.ஐ. மகேஸ்வரியின் சொத்துகளை முடக்க போலீஸ் முடிவு செய்தது. கடத்தல் சம்பவத்தில் முக்கிய நபராக கூறப்படும் முன்னாள் எஸ்.ஐ. மகேஸ்வரியின் பின்னணி குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மதுரையைச் சேர்ந்த மகேஸ்வரி கொடைக்கானலில் நிறுவனம் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. கட்டப் பஞ்சாயத்துகளில் ஈடுபட்டு லட்சக் கணக்கில் சம்பாதித்து வந்ததாகவும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மகேஸ்வரி சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்துகளை கணக்கெடுத்து அதனை முடக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். மகேஸ்வரியின் கூட்டாளிகள் யார் யார் என்பது தொடர்பான விவரங்களையும் போலீஸ் சேகரித்து வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top