சித்திர அழகன்!
சிந்தனை சிற்பி!
சரித்திர கேள்விக்காரன்!
வாழ்க்கையை அனுபவத்தோடு வாழ்ந்தவர்!
தன் வாழ்வை எவ்வித வாட்டம் இன்றி வாழ்ந்தவர்!
படைப்புகளால் பல கீர்த்திகள் பெற்று வாழ்ந்தவர்!
எத்தனை இன்னல்கள் வந்தாலும் மன திண்மை பெற்று வாழ்ந்தவர்!
யார் மீதும் அழுக்காறு சுமக்காமல் வாழ்ந்தவர்!
மதுவுக்கும் மயங்கியவர் அல்ல!
மாதுவுக்கும் மயங்கியவர் அல்ல!
பெண்களை கள்ளி பெண்கள் என்று வஞ்சிக்காமல் வாழ்ந்தவர்!
பல சாத்திர கவிதை படைத்து வாழ்ந்தவர்!
அறிவு ஆற்றலால் சேதனபிரபஞ்சம் கொண்டு வாழ்ந்தவர்!
இயற்கையோடு சொல்வதென்றால்
தனது இலக்கியத்திற்கு
துகள் விழாமல் பார்த்து வாழ்ந்தார்!
புளுகு விழாமல் பார்த்து வாழ்ந்தார்!
மன்பதை வென்று வாழ்ந்தார்!
தன் கவிதையை நுண்மை கொண்டு செதுக்கினார்!
தன் கவிதையில் அழியா புகழ் கொண்டு உருவாக்கினார்!
தனது கருத்தை மக்களிடம் செலுத்துவதே கவிஞரின் வேட்கை!
அருவி தரும் குளிர் நீர் போல்
நிலா தரும் நிழலை போல்
காற்று தரும் புயல் போல்
கல்வி தரும் செல்வம் போல்
தரியவர் தரும் பகைமை போல்
சாத்திரம் தரும் அறிவு போல்
தங்களுடைய போலானது என்னால் முடிந்த சிறிய கவிதையை தங்களின் நினைவு நாளில் வெளியிடுவதில் கடமை பட்டிருக்கிறேன்.
போல் என்றால் சுரதா.
சுரதா என்றால் உவமை கவிஞர்.
நீங்கள் மறைந்தாலும் தங்களுடைய படைப்புகள் என்னாலும் மறவாது.