இப்புவியில் வரலாற்றை எழுதியவர்கள் பல பேர் இருக்கலாம்.
ஆனால் வரலாற்றை
படைத்தவர்கள்
சில பேர் மட்டுமே.
வெற்றி கனி பறிப்பது என்பது
சுலபமான காரியம் அல்ல;
உழைப்பு, கடின முயற்சி
தேவை ஆகும்.
ஒரு தலைவன் உருவாகிறான் என்றால் கடமையை கண்ணியமாக செய்ய வேண்டும்;
உழைப்பை வியர்வையுடன் சிந்த வேண்டும்;ஆற்றலை
விரும்பி அர்ப்பணிக்க வேண்டும்;
தன்னை நம்பி வந்தவர்களை விருப்பதோடு
காப்பாற்ற வேண்டும்;
பல உயர்ந்த பண்புகள்
கொண்டவனாக இருக்க வேண்டும்;
விவேகத்தோடு அறிவை பயன்படுத்த
வேண்டும்.
நாம் பார்க்க போகும்
தலைவனும் அப்பாற்பட்டவர் தான்;
ஆம்.
இத்தாலி என்ற நாட்டிற்கும் பிரான்சு என்ற நாட்டிற்கும்
ஒரு சின்ன தீவு;
பெயர் கோர்சிகா.
தானாக பெருமை பெற்ற நாடா?
இல்லை,நாம் பார்க்க கூடிய தலைவனால்
பெருமை பெற்ற நாடா?
என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழ கூடிய ஒன்றாகும்.
“ராணுவம்” இந்த சொல் அவரின் வாழ்க்கையில் ஏற்பட்ட மந்திர சொல்லாகும்.1796
ஆகத்து மாதம் பதினைந்து அவரின்
பிறந்த தினம்.
உலகையே புரட்டி போட்டவரின் நாள்.
காலங்கள் ஓடின:
அவருக்கு ஓர் அண்ணன். பாதிரியார்களுக்கான பகுதி பக்கம் இவரின் படிப்பு வாழ்க்கை தொடர்ந்தது.
கரடு முரடான பாதைகள் நோக்கி
அவரின் பயணம்
சென்றது.
அதுவே ராணுவம்.
பிரான்சு நாட்டின் அடிமை தீவாக இருக்க கூடியது தான் கோர்சிகா.
பிரான்சு படிப்பு நன்றாக போனது.
ஆனால் அங்கு சூழ்ந்த மாணவர்கள்
அவரை தாழ்வாக நடத்தினார்கள்.
அவருடைய ஒரே தோழன் புத்தகம்.
வாசிக்க தொடங்கினார்.
உலகத்தை அறிந்தார்;
அனுபவத்தை பெற்றார்;
பிரான்சு நாட்டின் புரட்சி மன்னர் ஆட்சி வர கூடாது என்று ஓர் கூட்டம் கிளம்பியது.
மன்னர் ஆட்சி கீழ் வேலை செய்தாலும்
மக்கள் ஆட்சி தோன்றவும் பிரகாசம்
அடையவும் மக்கள் பக்கம் சென்றார்;
ஒரு பக்கம் மன்னர் ஆட்சி:மறு பக்கம் மக்கள் ஆட்சி
போராட்டம் வெடித்தது.
மேல் அதிகாரிகள் ஆச்சரியத்தில் மூழ்கினர்;
காரணம் அவர் எழுதிய சிறு கதை;
மக்கள் சேவை
பணியாற்ற முதல் வாய்ப்பு அவரின் கதவை தட்டி எழுப்பின.
Toulon பிரான்சு நாட்டின் துறைமுகம் ஒன்றின் பெயர்.
நம் ஊரில் பம்பாய் துறைமுகம் போல.
கடல் வழி தாக்குதல்
என்றால் toulon துறைமுகமே;
அப்போது அவர் ஒரு படை வீரன் மட்டுமே;
ஆனால் அவருடைய புரட்சிகரமான ஆற்றல், திட்டங்கள்
அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது;
இங்கிலாந்து நாட்டை
தோல்வியை சந்திக்க
செய்தார்.
அவருக்கு பரிசு ஒன்று காத்திருந்தது.
1793 24years பிரான்சு நாட்டின் பெருமைக்குரிய
“பிரிகேடியர் ஜெனரல்”பொறுப்பு அவரை நோக்கி வந்தது.
அடுத்தடுத்து பதவிகள்
அவரின் வெற்றிக்கு பரிசாக வந்தது.
“ஆர்மி ஆஃப் தி இன்டீரியர்” என்ற பதவி.
தொடர் வெற்றிகள் மூலம் படை வீரர்கள் புத்துணர்ச்சி பெற்று வந்தனர்.
வேகம் பல மடங்காக அதிகரித்தது;
காலம் செல்ல செல்ல அவர் படை தளபதியா அல்லது பேரரசரா என்ற கேள்வி எழுந்தது;
எகிப்து நாட்டின் போருக்கு பின் ராணுவ கடமைகளை
ஒத்தி வைத்து விட்டு ஜன நாயக கடமைகளை கவனிக்கலாம் என்று முடிவு செய்தார் அவர்.
மக்கள் ஆட்சி தொடர்ந்தது;
புதிய அரசாங்கம், மூன்று நபர்கள் கொண்ட ஆட்சி குழு,
தலைவராக தலைமை குடிமகன்
தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் தான் அந்த சாதாரண போர் வீரன்.
அவரின் முன்னேற்றத்திற்கு
காரணம் அவரின் செயல்பாடுகளே.
French சட்டங்களை ஒழுங்கு படுத்துகிற
முயற்சியில் இறங்கினார்.
அவரின் சட்டங்கள்
புதியவை, புரட்சிகரமானவை.
மன்னர் ஆட்சிக்கு இடையூறு அவர் தான்.
அவரின் முன்னேற்றத்தை தடுக்க வேண்டும்;
மக்கள் ஆட்சி ஒடுக்க
வேண்டும் என்ற முடிவு சிலரால் எடுக்கப்பட்டது.
“எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது, நான் என்ன தவறு செய்தேன்”என்று தனக்கு தானே கேள்வி மேற்கொண்டார்.
கிரீடம் யார் கையில் இருக்கிறதோ அவரை சாய்க்க வேண்டும் என்பதே அவர்களின் குறிக்கோள்.
சரி,தங்களுக்கு கிரீடம் வேண்டுமா எடுத்து கொள்ளுங்கள்.
மக்கள் மனதை வென்றதனால் நானே கிரீடம் சூடி கொள்ள போகிறேன் என்று முடிவு எடுத்தார்.
தளபதி?அரசர்?பேரரசர்?
மூன்றும் இல்லை.
சக்கரவர்த்தியாக!!!!
அது தனி மரியாதை.
மாவீரர்,லட்சியவாதி,
போர் வித்தகர்,தன்னம்பிக்கை சக்கரவர்த்தி அவர் தான் கோர்சிகா நாயகன்
“நெப்போலியன்”
சக்கரவர்த்தி -வரலாறு