சுழல் காற்று வீச தொடங்கின; கடல்களின் சீற்றம் குறையவில்லை;
அலைகள் ஓயவில்லை; அன்னை மேரி என்ற லண்டன் கப்பல்,
பிரான்சு கப்பல் இரண்டும் மோதிக்கொண்டன ஆறு பேர் உயிர் தப்பினர்.
அதில் ஒருவர் தான் வெளிநாட்டவர்; ஆனால் தமிழுக்காக பிறந்தவர்;
தமிழ் மொழிக்காக தன்னை அர்ப்பணித்து கொண்டவர்; _அவர் தாம் ராபர்ட் கால்டுவெல்.
1814 மே 7 அயர்லாந்தில் பிறந்தார். ஸ்காட்லாந்தில் முறையான கல்வி கற்றார். ஐரோப்பிய நாட்டில் பிறந்து தமிழனாக வாழ்ந்து வந்தார். காதலில் பல வகை உண்டு; இயற்கை மேல் காதல் கொள்ளலாம்;
பெண் மீது காதல் கொள்ளலாம். பெற்றோர் மேல் காதல் கொள்ளலாம்; என காதலில் பல வகை உண்டு அது போல சமயத்தின் மேல் காதல் கொண்டு சமய பணி ஆற்ற இந்தியா வந்தார்
_அவர் தாம் ராபர்ட் கால்டுவெல். இதற்கு காரணம் அவருடைய கிரேக்க நாட்டு பேராசிரியர் தான்.
1838 அவர் மொழியியல் ஆராய்ச்சி மேற்கொண்டார். ஆரிய மொழியான
சமசுகிருதம் திராவிடத்தில் கலவை கிடையாது. மலையாளம், தெலுங்கு,கன்னடம்
போன்ற மொழிகள் இருந்தாலும் இவை அனைத்திற்கும் முதன்மையான மொழி தமிழ் மொழி. அதுவே நம் திராவிட மொழி. 53 ஆண்டுகள் திராவிட மொழியை கற்று தேர்ந்தார்.
இடையங்குடி, திருநெல்வேலி மாவட்டம். தன்னை ஒரு வெளிநாட்டுக்காரன் என்று நினைக்காமல் தன்னையும் ஒரு மனிதனாக நினைத்து எனக்கு அடைக்கலம் கொடுத்த இடம் தான் இடையங்குடி_என்று கூறுபவர் ராபர்ட் கால்டுவெல். இடையங்குடிக்கு சிறப்பு செய்ய பல சீர்திருத்தங்கள் ஆலயங்கள் நிறுவினார்_அவர் தான் ராபர்ட் கால்டுவெல் துன்பம் வந்தால் துடிக்கும் மொழி, நன்மை விளைக்கும் நல்ல மொழி இளமை காக்கும் அருமை மொழி, வளம் நிறைந்த வசதியான மொழி, உலகில் மனிதன் பேசிய முதல் மொழி நம் தமிழ் மொழி
இத்தகைய சிறப்பு வாய்ந்த திராவிட மொழிகளை ஒப்பிட்டு திராவிட மொழியின் ஒப்பிலக்கணம் என்ற ஆராய்ச்சி மேற்கொண்டவர்_ அவர் தான் ராபர்ட் கால்டுவெல்.
புத்துயிர் பெற்ற தமிழ் மொழியின் சிறப்பை உருவாக்கியவர்
77 வயதில் 1891கொடைக்கானலில் இயற்கையோடு தன்னை இணைத்து கொண்டார்_அவர் தான் ராபர்ட் கால்டுவெல் அவருடைய தமிழ் பற்றை கூற விரும்புகிறேன் வடமொழி இல்லாமல்
திராவிட மொழிகளான தெலுங்கு,கன்னடம் இயங்குவது அரிது. கடிது ஆனால் வடமொழி சொற்கள் இல்லாமல் வளர வல்லதும் திராவிடத்தின் தாயாக விளங்கும் தமிழ் ஒன்றே என்று கால்டுவெல் கூறினார்
தமிழ் வாழும் வரை கால்டுவெல் வாழ்ந்து கொண்டே தான் இருப்பார்