தி செம்மொழி

தமிழ் செய்தி இணையதளம்

September 8, 2025

No# 1 தமிழ்நாடு செய்தி இணையதளம்

September 8, 2025

தமிழ் செய்தி இணையதளம்

வாதாடி போராடி வென்றவர்கள்!!!

அரசன் நாட்டை ஆள்பவன்; மக்கள் மனதை வென்றவன்;
புத்தி கூர்மை கொண்டவன்; நாட்டின் துயரங்களை நீக்குபவன்;
எப்பேற்பட்ட அரசனாக இருந்தாலும் தனது பேச்சாற்றலால்,கவி ஆற்றலால்,சொல் ஆற்றலால்,எழுத்து
ஆற்றலால், மொழி ஆற்றலால்,கல்வி அறிவின் மூலம் வென்று விடலாம்.
“தனது நாட்டை காப்பாற்ற சுழற்று உன் வாளை;அதை விட சிறந்தது சுழற்று உன் அறிவு வாளை.!!!
அது போல கல்வியில் சிறந்த அறிஞராக உருபெறுவதற்கு ஏற்ற பணி வழக்குரைஞர் பணி;
அப்பணியை கையாண்டு சாதனை படைத்த தலைவர்கள் பற்றி காண்போம்:
சரித்திரத்தில் இடம் பெற்றவர்; தனது பெயரை முத்திரையில் பொறிக்க வைத்தவர்;
நம் நாட்டின் விடுதலைக்காக முழு மூச்சுடன் சிறு உயிர் இனத்தை கூட
ஆபத்து வராமல் அகிம்சை வழியில் வெற்றி கண்டு அமைதி புரட்சியில் தன்னை
பதிக்க செய்தவர் காந்தி; அவர் ஒரு வழக்குரைஞர்!!! உலகிலேயே பொருளாதாரத்தில்
என் நாளும் முன்னேற்ற பாதையில் சென்று கொண்டு இருக்கும் அமெரிக்கா என்றால்
அதற்கு முக்கிய காரணம் ஆபிரகாம் லிங்கன்.
அந்நாட்டில் கறுப்பர்கள் ஒடுக்கப்பட்டு வாழ்ந்து வந்தனர்.
அவர்களின் உரிமைக்காக போராடி வெற்றி கண்டவர். அவர் ஒரு வழக்குரைஞர்!!!
பத்து விரல்களை வைத்து நூறு வரைக்கும் என்ன முடியும்.
அது போல 27 என்று கூட சொல்லிவிடலாம்.  ஆனால் 27 வருடம்
குறுகிய வட்டம் கொண்ட சிறு அறை,சிறை வாசம், சிறை தண்டனை
கறுப்பு நிறம் கொண்ட மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து போராட்டம் குணம் கொண்டு பிற்காலத்தில் தென் ஆப்பிரிக்க பிரதமராக பதவி ஏற்க நாட்டு மக்கள் நெல்சன் மண்டேலா
அவர்களுக்கு பரிசு மழை பெய்ய வைத்தனர். அவர் ஒரு வழக்குரைஞர்!!!
9 ஆண்டுகள் சிறை தண்டனை, 1920 ஒத்துழையாமை இயக்கம், உத்தரப்பிரதேசம்
போராட்டம் சிறை கைதி புத்தகத்திற்காக தன்னை அர்ப்பணித்து கொண்டவர்

உதாரணம்:

1935 சிறை சாலை 188 புத்தகம் வாசித்தார்,
1936 தன் மனைவி காச நோயால் பாதிப்பு அடைந்து இறப்பை சந்தித்தபோது கூட
பொது வாழ்வில் கலந்து கொண்டு அல்மோரா சிறை சாலை சென்றவர்
அவர் தாம் நம் நாட்டின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு.
அவர் ஒரு வழக்குரைஞர்!!! 1895_சட்டத்தை பயின்றார்,
இலவசமாக ஏழை எளிய மக்களின் நலனுக்காக வாதாடினார்; தனித்துவமான பாதை கொண்டவர்;
சிறைச்சாலையில் மாட்டிற்கு பதிலாக செக்கு இழுத்தார் ஆதலால் “செக்கு இழுத்த செம்மல்”
என்று அழைக்கப்பட்டார். “கப்பல் ஓட்டிய தமிழன்” என்றும் “வந்தே மாதரம் பிள்ளை” என்றும்
சிறப்பு பெயர் பெற்றார். அவர் தான் வ. உ. சி: அவர் ஒரு வழக்குரைஞர்!!! அம்பேத்கர்- பெயர் அல்ல
புரட்சி என்ற சொல்லிற்கு அங்கீகாரம் கொடுத்தவர்; உணர்வை ஏற்படுத்தியவர்;
அவர் தீண்டாமையை ஒழிக்க தீயாக புறப்பட்டவர்; அனைவராலும் ஒதுக்கப்பட்டார்;
ஒடுக்கப்பட்டார். சாதி ஒழிப்பை ஒரு கோட்பாடாக முன் வைத்தவர்;இலக்காக முன் வைத்தவர்;
அரசியல் அமைப்பின் தந்தை ஆக இருந்தவர் தான் அம்பேத்கர் அவர் ஒரு வழக்குரைஞர்;
எப்பணி ஆக இருந்தாலும் அப்பணியை சிறப்பாக செய்து கல்வி அறிவு பெற்று பல பல சாதனைகள்
படைப்போம் என்பதை குறிக்கோளாக கொண்டு வாழ்வோமாக!!!

-ம.அறிவுச்சுடர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top