
ஏழ்மை குடும்பம் 10 ஆண்டுகளாக குழந்தை இல்லை; 1879 செப்டம்பர் 17
வெங்கட்டர் – சின்னத் தாயி அவர்களுக்கு ஒரு மகனாக பிறந்தவர் அவர் தாம் தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்; பகுத்தறிவின் பகலவனாக மக்களுக்கு பகுத்தறிவை ஊட்டினார்;வெந்தாடி வேந்தராக அடையாளப்பட்டார்; பெண்களுக்கு போர் முரசாக முழங்கினார்; புத்துலக தொலைநோக்களராக செயல்பட்டார்;சமுதாய சிற்பி ஆக செதுக்கப்பட்டார்;சமூகத்தை சீர்படுத்தின்னார்; சாதி அறவே ஒழித்தார்; புராணத்தை புறம் தள்ளினார்; சுயமரியாதை இயக்கம் தொடங்கி சுயமாக சிந்திக்க செய்தார்; கடவுள் மறுப்பு ஆதரித்தார்; மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு; சிந்தித்து செயல் படு, சந்தேகித்து நடைபெறுகேள்வி ஞானம் வளர்த்து கொள்.என்று சொன்னவர்; அனைவரும் சமம் என்று உணர்ந்த அவர் புறம் தள்ளப்பட்ட மக்களுடன் தண்ணீர் வாங்கி குடிப்பார்.மகாத்மா காந்தி அவர்கள் மீது கொண்ட பற்று நாள் கதர் ஆடை விற்பனை தொடங்கினார் மது ஒழிப்பிற்கு 500 தென்னை மரங்கள் தோப்பில் இருந்து வெட்டி சாய்த்து மது ஒழிக என்று முழங்கினார்; கேரள மக்கள் உரிமைக்காக போராடி சமூக சீர்திருத்தம் கொண்டு வந்து வைக்கம் வீரர் என்ற பட்டத்தை வென்றார்; 1925 சுயமரியாதை இயக்கம் தொடங்கி எழுச்சி பெற்றார். ஆதரவு ஒன்று இருந்தால் எதிர்ப்பும் இருக்கும், அது போல அவருக்கு தேச துரோகி என்ற பட்டம் பரிசாக கிடைத்தது. நாம் எல்லாம் அவருக்கு நன்றி கடன் பட்டவர்கள். காரணம் இன்றைக்கு கோவிலுக்கு செல்ல எவ்வித சாதி வேறுபாடு இல்லாமல் அனைவரும் சமம்என்ற நோக்கில் உள்ளே செல்கிறோம். அதுவே நமக்கு கிடைத்த வெற்றி; அடிமை சங்கிலியை அவிழ்த்து காட்டியவர்; 1937 ராஜாஜி முதல்வர் பதவி அடைந்ததும் இந்தி கொண்டு வந்தார் பள்ளி பாடப்புத்தகத்தில். அதை எதிர்த்து இந்தி எதிர்ப்பு போராட்டம் கொண்டு வந்து மாணவர் மத்தியில ஒரு பெரும் எழுச்சி உணர்வை ஏற்படுத்தினார்.
யார் அவர்? யாரை சொல்கிறோம்??
கடவுளை மற!!! மனிதன் நினை!!! என்று கூறியவர் தான் தந்தை பெரியார்
அவருடைய பிறந்த நாள் செப்டம்பர் 17 அவர் புகழ் நிலைக்கட்டும் மக்கள் அவரை நினைவில் கொள்ளட்டும்!!!!