
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. குரூப் பிரிவு ஆட்டங்கள் முடிவுற்ற நிலையில் சூப்பா் 4 ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
சூப்பர்4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும்.
இன்றைய சூப்பர் 4 சுற்றின் 3 வது ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. முந்தைய ஆட்டங்களில் இலங்கை அணி வங்காள தேசத்திடமும், பாகிஸ்தான் அணி இந்தியாவிடமும் தோல்வியடந்துள்ளதால் இன்றைய ஆட்டத்தில் இரு அணிகளும் வெற்றியை தன்வசப்படுத்த போராடும் என்று எதிர்பார்க்கப்படடுகிறது.
இந்த போட்டி அபுதாபியில் உள்ள சயீத் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று இரவு இந்திய நேரப்படி 8 மணிக்கு தொடங்குகிறது.