தி செம்மொழி

தமிழ் செய்தி இணையதளம்

October 27, 2025

No# 1 தமிழ்நாடு செய்தி இணையதளம்

October 27, 2025

தமிழ் செய்தி இணையதளம்

“இட்லிகடை”பட விழாவில் தனுஷ் பேச்சு..!

நடிகர் தனுஷ் நடித்த “இட்லி கடை” திரைப்படம் வரும் அக்டோபர் 1 அன்று வெளியாக உள்ளது. இந்த நிலையில் இன்று மதுரையில் இட்லி கடை படத்தின் பிரமோஷன் நிகழச்சி நடைபெற்றது. இதில் நடிகர்கள் தனுஷ், அருண்விஜய், பார்த்திபன் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.

இவ்விவிழாவில் பேசிய தனுஷிடம் அவர் நடித்த  படங்களில் பேசப்பட்ட டயலாக்குகள் குறித்தும் அந்த டயலாக்குகளை தற்போது எந்த நிலையோடு ஒப்பிட்டு பார்ப்பீர்கள் என்றும் கேள்விகள் கேட்கப்பட்டது. அந்த கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்,

தனுஷிடம் கேட்கப்பட்ட கேள்வி : ”நாங்கள் எல்லாம் சுனாமிலயே SWIMMING போடுறவங்க” என்ற டயலாக் குறிதத கேள்விக்கு, ”என் வாழ்க்கையே அது தான் சுனாமிலேயே ஸ்விம்மிங் போட்டுக் கொண்டே தான் இருக்கிறேன். 16 வயதில் கேமரா முன் நிற்கும்போது இதெல்லாம் ஒரு மூஞ்சியா என கேட்டபோது ஆரம்பித்தது இப்போதும் ஸ்விம்மிங் தான் போட்டுக் கொண்டே இருக்கிறேன்” என்றார்.

”ரொம்ப சேட்டை புடுச்ச பையன் சார்” என்ற டயலாக் குறித்த கேள்விக்கு  ”ஜாலியாக பதிலளித்த தனுஷ், ”என் அண்ணன் செல்வராகவன் தான் சேட்டை புடுச்ச பையன், அண்ணனுக்கு தம்பியை டார்ச்சர் பண்ணுவதில் என்னதான் சந்தோசமோ..?” என்றார்.

”ஜெயிக்கிறோமா இல்லையா முதலில் சண்டை செய்ய வேண்டும்” என்ற டயலாக் குறித்த கேள்விக்கு?, ”ஜெயிக்கிறோமோ!! தோக்குறோமோ!!! முதலில் சண்டை செய்ய வேண்டும் ஆனால் சண்டை அங்கு செய்யாதீர்கள் சண்டையை படிப்பில் செய்யுங்கள் உழைப்பில் செய்யுங்கள் !!! சண்டை நமக்குள் இருக்க வேண்டும் மனதுக்குள்ளே இருக்க வேண்டும். இன்னைக்கு இருக்கிறத விட நாளைக்கு நாம் இருக்கும் இடம் சிறப்பாக இருக்க வேண்டும் அதற்கு தான் சண்டை செய்ய வேண்டும். படத்தில் அந்த டயலாக் மாஸாக இருக்கலாம் ஆனால் நிஜத்தில் அப்படி இல்லை சண்டை அங்கு செய்யாதீர்கள் உங்களுக்குள் செய்யுங்கள்” என்றார்

”படிப்பை மட்டும் நம்ம கிட்ட இருந்து எடுத்துக்க முடியாது சிதம்பரம்” என்ற டயலாக் குறித்த கேள்விக்கு ? ”இதுவரைக்கும் கேட்ட வசனங்களிலே சிறப்பான வசனம் இது தான்” என்றார்.

எப்ப சார் ரிலாக்ஸா இருப்பீர்கள் என்ற கேள்விக்கு? “இப்போது நான் ஜாலியாக உள்ளேன் இதுதான் ஜாலி இதுதான் ரிலாக்ஸேஷன் என் பசங்களோட டைம் ஒதுக்குறது தான் அவர்களோட விளையாடுவது தான் மகிழ்ச்சி” என்றார்.

ரசிகர்களுக்கு உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன என்பது குறித்த கேள்விக்கு? “என் ரசிகர் கிட்ட எனக்கு ரொம்ப பிடித்தது நிறைய இருக்கிறது அதில் முக்கியமானது என்றைக்கும் மாறாத நிரந்தரம் தான் என் ரசிகர்கள் உள்ளது. யார்கிட்டயும் வம்புக்கு போகாத குணம் ஆனால் இவர்களைப் பார்த்தாலே இவங்க கூட வம்பு பண்ணவும் கூடாது என அவர்களுக்கு தெரியும் என் ரசிகர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது சாதாரண சினிமா ரசிகனாக இருந்த என்னை உங்களுடைய நண்பனாக பிடித்த நடிகனாக உங்கள் குடும்பத்தில் ஒருவனாக வைத்து அழகு பார்க்கிறார்கள் அந்த மாறாத அன்பு ரொம்ப பிடிக்கும்” என்றார்.

விசில் அடித்திட்டும் கைதட்டி கொண்டு மட்டும் இல்லாமல் இங்கு இது போன்ற மேடைக்கு எழுந்து வாருங்கள் வரணும் உழைச்சி இங்கு வரணும் எல்லாராலயும் முடியும் கண்டிப்பாக நீங்கள் இதை செய்யணும் செய்வீர்களா” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “எனது அப்பா சென்னைக்கு வர பஸ்ஸுக்கு காசு இல்லை. மதுரையில் இருக்கிற சொந்தக்காரர்கள் வீட்டிற்கு வந்து பணம் வாங்கிட்டு மெட்ராசுக்கு போவதற்கு நினைத்தபோது மதுரைக்கு வரவும் பஸ்ஸுக்கு பணம் இல்ல. பணம் வாங்கிட்டு மெட்ராசுக்கு வர வேண்டும் என்பதற்காக செல்வராகவன் 4 வயது இருக்கும்போது எங்க அம்மா 3 மாசம் கர்ப்பமாக இருந்த போது, அவங்க ஊரில் இருந்து மதுரைக்கு நடந்தே கிட்டத்தட்ட 120 கிலோமீட்டர் நடந்தே வந்து ஒரு சொந்தக்காரங்களை பார்க்க வந்தாங்க.

அப்படி எங்க அப்பாவும், எங்க அம்மா கர்ப்பமாக இருந்தபடி கால் கடுக்க நடந்து வந்து மேடை தான் இந்த மேடை. இந்த மேடையில் அவர்களை கொண்டு வர எவ்வளவு முயற்சி செய்தேன். அவர்கள் இருந்திருந்தால் இன்னும் இந்த மேடை முழுமையாகவும் நிறைவாகவும் இருந்திருக்கும். ஏதோ ஒரு சில காரணங்களால் அவர்களை அழைத்து வர முடியவில்லை.

மதுரையில் ஆடுகள பட சூட்டிங் போது 300 நாட்கள் இருந்தேன். ஆடுகளம் படத்திற்கு மதுரையில் நான் ஓடாத ஆடாத தெரு கிடையாது, திருப்பரங்குன்றத்தில் 30 நாள் இருந்தேன்; மதுரையில் இருந்த நாட்களில் நான் அமைதியாக நிம்மதியாக இருந்தேன். நான் இந்த மண்ணை சேர்ந்தவன் தான் இந்த ஊர் ஆள் மாதிரி தான் நான் இருப்பேன்” என்றார்.

இதனை அடுத்து மேடையில் இட்லி கடை திரைப்படத்தில் பாடப்பட்ட ”என் சாமி வந்தான்” என்ற பாடலை பாடி ரசிகர்களை வியக்க வைத்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top