எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு
என்று புரட்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் முழங்கியதற்கு ஏற்ப,நம் மொழியை காக்கவும், தமிழ் இனத்தை மீட்கவும், கடந்த காலங்களில் அரும்பாடுபாட்ட மொழிப்போர் தியாகிகளின் நினைவு நாள் சனவரி 25ம் தேதி நாடெங்கும் எழுச்சியுடன் நடைபெற்று வருகிறது.
மொழி போராட்டங்களில் இந்தி எழுத்துக்களை பெயர் பலகைகளில் அழிக்கும் போராட்டங்களிலும் , இந்தி ஆதிக்கத்தை அகற்றும் உணர்ச்சிகரமான போராட்டங்களிலும்
கலந்து கொண்டு சிறைச்சாலை, சித்திரவதைகள் , அடி,உதை இவற்றை இன்முகத்தோடு ஏற்று கொண்ட தொண்டர்கள் பல பேர். 1975 மிசா எதிர்ப்பு போராட்டம் தமிழகத்தில் நடைபெற்ற போது சிறைச்சாலைகளில் தலைவர்களிடம் தொண்டர்களிடம் இடமும் அடைக்கப்பட்டிருந்த இளம் வயது தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை காவலர்கள் கண்மூடித்தனமாக தாக்கிய போது அவரை காப்பாற்ற குறுக்கிட்டு அடி உதைகளை தாக்கியதால் மாவீரன் சிட்டிபாபு உயிர் இழந்தார்.
அதை போல் 1938ல் தமிழகத்தில் வெடித்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட தாளமுத்து, நடராஜன்
ஆகியோர் சிறையிலேயே சித்திரவதை செய்யப்பட்டதால் இறந்தார்கள்.
இது போல் மொழி போராட்ட வரலாற்றை புரட்டி பார்க்கிறபொழுது நம் உள்ளம் சிலிர்க்கிறது; உணர்வுகள் எழுகிறது; தாய் மொழியே காக்க வேண்டும் என்ற கடமை உணர்வு மலர்கிறது.
தமிழுக்கு அமுதென்று பேர் _ இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
என்று போற்றினார் பாவேந்தர் பாரதிதாசன்.
தாய் மொழி என்பது தேனினும் இனிய மொழி.தமிழ் மொழியை ஒவ்வொரு தமிழரும் நம் உயிருக்கு சமமாக கருதி காக்க வேண்டும் என்பதே இதன் பொருளாகும்.
பாவேந்தர் குறிப்பிட்டதை போல
தமிழகத்தில் வெடித்த மொழிப்போர் கிளர்ச்சிகள் மத்திய அரசு அலுவலகங்களில் பெயர் பலகைகளில் இந்தி எழுத்துக்களை அழிப்பதற்கும், இந்தி ஆதிக்கத்தை தமிழகத்தில் நுழைய விடாமல் தடுப்பதற்கும், வீறு கொண்டு எழுந்து, அரும்பாடுபட்டனர்
மொழி போர் தியாகிகள். அவர்கள் மொழி போர் தியாகிகள் மட்டுமே அல்ல; தமிழர் போர்படையின் வீரர்கள்;இவர்களை
எழுச்சியுடன், கொள்கை உடையவர்களாகவும் வார்ப்பித்தார் தந்தை பெரியார்.
முதன் முதலில் 1936ல் இந்தி மொழி தேசிய மொழியாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து 1936ல் மார்ச் 7 அன்று. குடியரசு இதழில் இந்தியை எதிர்த்து உணர்வு எழக்கூடிய அளவிற்கு கண்டன கட்டுரை எழுதினார் தந்தை பெரியார். இக்கட்டுரை தமிழர் இடையே மிகுந்த எழுச்சியை உருவாக்கி வந்தது.
1937ல் பேரறிஞர் அண்ணா அவர்கள் பெருமை பெற்ற காஞ்சியில் இந்தி எதிர்ப்பு மாநாடு நடத்தப்பட்டு மக்கள் இடையே எழுச்சி உருவானது.
1938ல் தமிழகத்தின் பள்ளிக்கூடங்களில் இந்தி பாடம் கட்டாயம் ஆக்கப்பட்டது எதிர்த்து தந்தை பெரியார் பெரும் போராட்டம் நடத்தினார். இதன் விளைவாக பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையிலிருந்த தந்தை பெரியார் பிறந்த நாளை மக்கள் எழுச்சியுடன் கொண்டாடினார்கள்;
இப்போராட்டத்தின் தலைவராக தந்தை பெரியார் அவர்களும், செயலராக பேரறிஞர் அண்ணா அவர்கள் செயல்பட்டார்கள்.
19.02.1940 சென்னை கோகலே மண்டபத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து தந்தை பெரியார் சிங்கம் போல் கர்ஜித்தார். அதை கண்ட ஆட்சியாளர்கள் மிரண்டனர். மக்கள் எழுச்சியுடன் 21.2.1940
இந்தி கட்டாயத்தை கைவிடுவது என்று சென்னை மாகாண அரசு அறிவித்து அதற்கான ஆணை பிறப்பித்தது. இதன் வெற்றியை தந்தை பெரியார் தலைமையில் மக்கள் எழுச்சியுடன் கொண்டாடினார்கள்.
ஒரு முனையில் தந்தை பெரியார் வெற்றிகரமாக இந்தி ஆதிக்கத்தை விரட்ட செயல் பட்டபோது, மறு முனையில் இந்த அறப்போராட்டங்களுக்கு வலு சேர்க்கும் அளவில் நம் தென்னாட்டு பெர்னாட்ஷா பேரறிஞர் அண்ணா அவர்கள் செயல்பட்டார். தனது பேச்சு திறனால், கொள்கை உணர்வினால் பெரியார் அவர்கள் இடம் நெருக்கமான நட்பு கொண்ட அண்ணா, இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் 1938 தமிழ் நாடு பள்ளிக்கூடங்களில் இந்தி கட்டாயத்தை எதிர்த்து பெரியார் உடன் கை கோர்த்து ஈடுபட்டார் அண்ணா அவர்கள். 9 மாதங்கள் சிறை தண்டனை இன்முகத்தோடு ஏற்று கொண்ட அண்ணா தொண்டர்கள் இடையே பெரும் மதிப்பை பெற்றார்.
தொண்டர்களிடையே ,தமிழக இளம் வீரர்களே! தமிழை காக்க அறப்போர் நடத்துங்கள், போராடுங்கள்” என்று முழக்கமிட்டார்.
1948 ஜூலை 17நடைபெற்ற அண்ணா அவர்கள் கைது செய்யப்பட்டு சிறை வாசம் பெற்றார். 1948 ஆகத்து 2 பள்ளிகளில் முன்பு சாலை மறியல் பேரறிஞர் அண்ணா தலைமை பொறுப்பு ஏற்று வழி நடத்தினார்
1952 ஆகத்து 1 தந்தை பெரியார் திருச்சி,அண்ணா ஈரோடு இந்தி ஆதிக்கத்தை விரட்டி அடித்தனர்.
1960 சென்னை கொடும்பாகத்தில் இந்தி எதிர்ப்பு அண்ணா நடத்தினார்.1963 நவம்பர் 17 அண்ணா அவர்கள் 3 மாதம் சிறை தண்டனை பெற்றார்.
1965 சனவரி 25 அன்று குடியரசு நாளை துக்க நாளாக
கொண்டாட கேட்டு கொண்டதால் அண்ணா அவர்கள் சிறைப்பட்டார்.
“பூட்டிய இருப்பு கூட்டின் கதவு திறக்க பட்டத்து.
சிறுத்தை வெளியே வா”.
என்ற வரிகளுகேற்ப
1938நடந்த மொழி போரில் தனது இளம் வயதில் திருவாரூரில் மாணவர்களை திரட்டி தமிழ்க் கொடி ஏந்தி “ஓடி வந்த இந்தி பெண்ணே கேள், நீ தேடி கோழையுள்ள நாடு இதுவல்லவே” என்று முழக்கமிட்டு தனது பொது வாழ்வை தொடங்கிய முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் ஓய்வுக்கே ஓய்வு கொடுத்து பேச்சால் எழுத்தால் தமிழ் இனத்தை தட்டியெழுப்பி காத்தவராக தமிழ் இனத்தின் ஒப்பற்ற தலைவராக நம்மை காத்தவர் கலைஞர் அவர்கள்
1952 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் திருச்சியில் அஞ்சல் நிலையம் பெயர் பலகைகளில் இந்தி எழுத்துக்களை தலைவர் கலைஞர் அவர்கள், அன்பில் மற்றும் தொண்டர்களுடன் அழித்தார். 1953 கோவில் பட்டியில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாவட்ட மாநாடு தலைவர் கலைஞர் தலைமையேற்றார்.
1965 நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டம் பேரறிஞர் அண்ணா அவர்களால் போராட்ட குழு தலைவராக நியமிக்கப்பட்டார் தலைவர் கலைஞர் அவர்கள்.
இளம் வயதில் மாணவர்களோடு ஏற்பு வைத்திருந்த தலைவர்,1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்திலும், மாணவர்களோடு தொடர்பும் ஈடுபாடும் கொண்டவராக விளங்கினார்.
பல இடங்களிலும் மாணவர்கள் மீது தடியடி, துப்பாக்கி சூடு , சித்திரவதை, பல மாணவர்களின்
உயிர் இழப்பு, சிதம்பரம் ராஜேந்திரன் என்ற மாணவர் துப்பாக்கி சூடு பலி,மாயவரம் தண்டபாணி என்ற மாணவர் தீக்குளிப்பு,
சாரங்கபாணி, விராலிமலை சண்முகம்,கீரனூர் முத்து, கீழ்பழுவூர் சின்னசாமி,இன்னும் பல பேர் தன் இன்னுயிரை மாய்த்து கொண்டு தமிழ் காத்தனர்..
இம்மாபெரும் போராட்டத்தில் மாணவர்களாக திகழ்ந்த எல்.கணேசன், துரை முருகன், ரகுமான்கான், விருது நகர் சீனிவாசன், கே.ராஜமாணிக்கம் இன்னும் பல மாணவர்கள் பெரும் பங்காற்றினார்கள்.இப்போராட்டங்களில் மாணவர்களை தூண்டி விட்டதாக தலைவர் கலைஞர் அவர்கள் மீது பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது; பாளையங்கோட்டை தனிமை சிறையில் அடைக்கப்பட்டார்; சிறை சாலை சென்று பார்வையிட்ட அண்ணா அவர்கள்,”என் தம்பி கருணாநிதி அடைக்கப்பட்ட பாளையங்கோட்டை சிறை சாலை தான்,நான் செல்லும் யாத்திரை ஸ்தலம்”என்று குறிப்பிட்டது கலைஞரின் தியாகத்திற்கு கிடைத்த பாராட்டு மகுடம் ஆகும்.
1986 மத்திய அரசு அலுவலகங்களில் கடிதப் போக்குவரத்துகள் இந்தியில் இருக்க வேண்டும் என்ற உத்தரவால் தலைவர் கலைஞர் இந்தி ஆதிக்கத்தை ஒழிக்க பிரகடனம் செய்தார்.
இந்தி சட்ட நகலை எரிக்கும் போராட்டத்தை அறிவித்தார்.
இந்தி எதிர்ப்பு கருத்தரங்குகள் தமிழ் நாடெங்கும் நடத்தப்பட்டது.. இதனால் மாணவர்களிடையே முகுந்த எழுச்சி உருவானது.
இப்போராட்டத்தில்
தலைவர் கலைஞர் அவர்களை சிறைசாலையில்
கைதி அணிவித்து தண்டனை ஏற்றார்.
தலைவர் கலைஞர் அவர்கள் விடுதலை செய்யக் கோரி புதுக்கோட்டையில் மன்னர் கல்லூரி,திருச்சியில்
தந்தை பெரியார் கல்லூரி,சென்னை,தஞ்சை, மதுரை,கோவை, சேலம், பட்டுக்கோட்டை, மயிலாடுதுறை பெரும் பங்கு வகித்து
போராட்டங்கள் நடத்தினார்கள்.
மூண்டெழுந்த மொழிபோர்களின் காரணமாக இந்தி ஆதிக்கத்தை விரட்டி நம் அன்னைத் தமிழ் மொழி செம்மொழியாக உயர்த்தப்பட்டு உலக அரங்கில் போற்றப்படும் பெருமையினை தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் பெற்று தந்துள்ளார் என்பதை இளைய தலைமுறையினர் நன்றியுடன் போற்றி
கடமைப் பட்டவர்கள் ஆவோம்.
மேலும்,இளைஞர் மத்தியில் பெரும் புரட்சி ஏற்படுத்தி இன்றைய நிலையில்
திராவிட கொள்கைகளை அழியாமல் காத்து வருகிறார்.
வாழ்க தளபதி!!!!
வளர்க திராவிட இயக்கம்