புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. காரியங்களில் அனுகூலம் உண்டா கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தந்தையின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். நண்பர்களிடம் கேட்ட உதவி கிடைக்கும். அலுவலகத்தில் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லபடி செயல்பட்டு விற்பனையை அதிகரிப்பார்கள்.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் ஏற்படக்கூடும்.