வேலூர் மாவட்டம் காட்பாடி காந்தி நகரில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இல்லத்தில் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனை 10க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீசாரின் பாதுகாப்பில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
துரைமுருகனின் இல்லத்துடன் இணைந்த நான்கு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இதனால் காந்தி நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் பரபரப்பாக மாறியுள்ளது. துரைமுருகனின் ஆதரவாளர்கள் மற்றும் திமுகவினர் கூடுகூடாக அப்பகுதியில் குவிந்து வருகின்றனர்.
மேலும், காட்பாடி அருகே உள்ள பள்ளிகுப்பம் பகுதியில் திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் இல்லத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு முன்பாக, 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் இருந்து ரூ.11 கோடி பணத்தை அமலாக்கத்துறை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சோதனைகளின் பின்னணி மற்றும் காரணம் குறித்து அதிகாரிகள் இதுவரை எந்தவித தகவலையும் வெளியிடவில்லை.
Leave a Reply