தி செம்மொழி

No# 1 தமிழ்நாடு செய்தி இணையதளம்

January 22, 2025

No# 1 தமிழ்நாடு செய்தி இணையதளம்

January 22, 2025

No# 1 தமிழ்நாடு செய்தி இணையதளம்

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டு மிகப் பெரும் பான்மை இடங்களை ஜனாதிபதி அனுர குமார திஸா நாயக்கவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணி கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. வெற்றி பெற்ற இடங்கள் 159.

 

கரிபூசப்பட்ட ராஜபக்சே குடும்பம்

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் (2020) முன்னாள் ஜனாதிபதி இனப்படுகொலை மூலம் பல்லா யிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த மகிந்த ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சி 145 இடங்களைப் பெற்றிருந்தது. இருந்தாலும் மசோ தாக்களை நிறைவேற்ற போதுமான இடங்கள் இல்லை.  அந்த ராஜபக்சே குடும்பக் கட்சிக்கு இந்தத் தேர்த லில் மக்கள் தந்தது வெறும் 3 இடம் மட்டுமே. சுழலும் காலம், தோல்வி என்ற கரியை ராஜபக்சே சகோதரர் கள் முகத்தில் சிங்கள மற்றும் தமிழ் மக்கள் கரங்க ளால் பூசியுள்ளது.
இதற்கு முன்னால் கோத்தபய ராஜபக்சே சிறிது காலம் ஜனாதிபதியாக இருந்த போது மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானது இலங்கை.  மகிந்த ராஜபக்சே ஆட்சிக்காலத்தில் இனப்படுகொலைக்கும் பாலியல் வன்கொடுமைக்கும் உள்ளான தாய்மார்கள், இளம் பெண்கள், 10 வயதுக்கும் மேற்பட்ட எல்லா தமிழ் இளைஞர்கள், பச்சிளம் குழந்தைகள் என பாகுபாடு பார்க்காமல் படுமோசமாக சித்ரவதைக்கு ஆளாக்கி படுகொலை செய்து பசி தீர்த்துக் கொண்ட  கழுதைப் புலிகளாக காட்சி தந்த ராஜபக்சே குடும்பம், சிங்கள மக்களாலேயே வீடு புகுந்து தாக்கப்பட்டு அவர்களது

அரண்மனை அங்குலம் அங்குலமாக பிரித் தெடுக்கப்பட்டு இடித்து நொறுக்கி பிரித்தெறிந்து விரட்டியடிக்கப்பட்டனர். வினை விதைத்தவன் வினையை அறுப்பான் என்பது எவ்வளவு உண்மை பார்த்தீரா! தாம் தான் என்று ஆணவத்தோடு இருந்த ராஜபக்சே  குடும்பம் தலையைத் தக்க வைத்துக் கொள்ள பட்டபாடு, ஓடிய ஓட்டம் உலகறிந்தது.
2009 போரின் இறுதிக் கட்டத்தில் வெள்ளைக் கொடியேந்தி சரண டைய வந்த நடேசன், புலித்தேவன், சார்லஸ் ஆண்டனி, நிரஞ்சன் என  எண்ணற்ற போராளிகளை சர்வதேச சட்டப்படி மன்னிக்க வேண்டிய இராணுவ அமைச்சராக இருந்த கோத்தபய ராஜபச்சே அதிகார ஆணவத்தில் அனைவரையும் சுட்டுத் தள்ளி சுகம் கண்டதை மறக்க முடியுமா?

காணாமல் போன கணவர்கள், அண்ணன், தம்பி கள், உறவினர்கள் எங்கே எங்கே என்று  காத்திருந்து கதறிய தாய்மார்களின் குரல் ராஜபக்சே கூட்டத்தின் செவிக்குச் சேரவில்லை.
ஆனால் கோத்தபய ஜனாதி பதியானவுடன், காணாமல் போனவர்களாக கூறப் படும் அனைவரும் கொன்றழிக்கப்பட்டனர் என்று, உலக நாடுகள் பார்த்துக் கொண்டு இருக்கும்போதே ஆணவத்தோடு அறிவித்தார். “உண்மை மௌனத்தால் நிரப்பப்படுமானால் அந்த அமைதியும் பொய்யே” என்பார் அறிஞர் எவ்ஜெனி யெவ்துஷென்கோ.

அப்படித்தான் காணா மல் போனவர்கள் எங்கே எங்கே என்ற போது மௌன மாகவே இருந்த கோத்தபய, கடைசியில் உண்மை யைச் சொல்லி தனது மௌனமும் அமைதியும் பொய்யே என்று நிரூபித்தார். கேட்பார் யாருமில்லையா, கேட்கவும் நாதியில்லையா என்று கண்ணீர் வடித்தனர் உலகத் தமிழ் மக்கள். அந்த நேரத்தில் இன்றைய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஐ.நா மனித உரிமை கமிஷனி டம் நேரடியாகச் சென்று இலங்கையில் இனப்படுகொலை நடந்துள்ளது; உடனே ஐ.நா தலையிட்டு விசாரணை செய்து ராஜபக்சே சகோதரர்களை சர்வதேச நீதிமன் றத்தில் குற்றவாளிகளாக நிறுத்தித் தண்டனைப் பெற்றுத் தர வேண்டுமென்று வலியுறுத்தினார்.

ஆனால் கொக்கரித்து கும்மாளமிட்ட கொலை வெறி ராஜபக்சே கூட்டம் அதற்கு அனுமதி தரவில்லை. ஐ.நாவாலும் ஏதும் செய்ய இயலவில்லை. எப்படி இன் றைக்கு ஐ.நாவின் பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் அவர்களை, காசாவிற்கு ஆதரவாக இருக்கி றார் என்று பொய்யாக குற்றம் சுமத்தி, இஸ்ரேலை போரை நிறுத்த வேண்டுமென வலியுறுத்தியதற்காக அந்நாட்டுக்குள்ளேயே நுழையக் கூடாது என்று இஸ் ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு சொல்கிறரோ அதைப் போல அன்றைக்கு ராஜபக்சே ஐ.நா அதிகாரி களை இலங்கைக்குள் நுழைய அனுமதிக்கவில்லை திஸா நாயக்கவும், செயல்பாடும் இத்தகைய துயரம், வேதனை, நெருக்கடி, போ ராட்டம், எழுச்சி- ஆகியவற்றின் பின்னணியில் தான்,  தற்போதைய இலங்கை ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் நடந்துள்ளன.

2024 செப்டம்ப ரில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில், வெற்றி பெற்றுள்ள அனுர குமார திஸா நாயக்கவுக்கு தமிழர் பகுதிகளில் அதிக வாக்குகள் விழவில்லை.
சஜித் பிரேமதாச விற்குத்தான் தமிழர்கள் அதிகம் வாக்களித்தனர். ஆனால் தற்போது நவம்பரில் நடந்து முடிந்துள்ள நாடா ளுமன்றத் தேர்தலில் மட்டகளப்பு மாவட்டத்தை தவிர யாழ்ப்பாணம் உட்பட மற்ற தமிழர் பகுதிகளில் திஸா  நாயக்கவின் கட்சிக்கே தமிழர்கள் அதிகம் வாக்க ளித்துள்ளனர். இதில், தமிழர்களின் வீரம் குறைந்து விட்டதாக கரு தக்கூடாது. உண்மையில், தமிழர்கள் விவேகத்துடன் வாக்களித்துள்ளனர்.

ஈழத்தமிழர்கள் பிரச்சனையில் திஸா நாயக்கவின் ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) கட்சியின் நிலைப்பாடு ஏற்கத்தக்கதாக இல்லை; விமர்சிக்கப்பட்டது என்பது உண்மையே. ஆனால், பொறுப்புமிக்க பதவிக்கு வந்தவுடன் சிலர் சர்வாதிகாரியாக ஆவதும் உண்டு; சிலர் முழுமையான ஜனநாயகவாதி ஆவதும் உண்டு. அதற்கு வரலாற்றில் பல உதாரணங்கள் உண்டு.

இதற்கு, ஜேவிபி தலைவர், புதிய ஜனாதிபதி திஸா நாயக்கவை உதாரணமாக சொல்லலாம். நாடாளு மன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழர்களிடமி ருந்து பறிக்கப்பட்ட நிலங்களை மீட்டுத் தருவேன் என்றும், வடக்கு கிழக்கு வாழ் தமிழர்களுக்கும் தெற்கு வாழ் சிங்களர்களுக்கும் பாகுபாடு காட்ட மாட்டேன்  என்றும் உறுதியளித்தார்.

இலங்கையில் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுப்பேன் என்றதோடு உலக வங்கி யிடம் 200 மில்லியன் டாலரை கடனாகவும் பெற்றார். விலைவாசியை கட்டுப்படுத்துவேன் என்றார். ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்றும் கூறியுள்ளார்.

போர் முடிந்து 15 ஆண்டுகளாகியும் திறக்கப்படா மல் மூடியே கிடந்த பலாலி அச்சுவேலி சாலையை திறந்து விட்டதன்மூலம் தமிழர்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றியுள்ளார்.  அதுமட்டுமல்ல, இலங்கையில் ஜனாதிபதிக்கே 1978 முதல் இடையிடையே  அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டன. பின்னர் வந்த ஜனாதிபதிக்கே அனை த்து அதிகாரம் என்றானது.

இவர் குறைப்பேன் என்றார்.அதைப் போல், ஜனாதிபதியின் அதிகாரத்தை குறைத்துக் காட்டினார். திஸா நாயக்கவின் இப்படிப்பட்ட செயல்பாடுகள் தமிழர்கள் மத்தியில் மட்டுமல்ல, சிங்களர்கள் மத்தி யிலும் நம்பிக்கையை ஏற்படுத்தியது. அதனால் தான் ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு கிடைத்த வாக்குகளை விட நாடாளுமன்றத் தேர்தலில் அவர் கட்சிக்கு கூடுதலாக பெரும்பான்மை வாக்குகளை மக்கள் வழங்கியுள்ளனர்.

நமது எதிர்பார்ப்பு என்ன?

அவரது அரசு இந்தியாவையும் சீனாவையும் ஒரே பார்வையோடு பார்க்க வேண்டும்; இந்தியாவுடன் கூடு தலாக நெருக்கம் காட்ட வேண்டும்.

சீனாவிற்கு துறை முகத்தை (அம்பந்தோட்டா) கொடுத்ததை திரும்பப் பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நமக்கு உள்ளது.  மேலும், திஸா நாயக்க அரசு  எல்லை மீறியதாகக் கைது செய்யப்படும் தமிழக மீனவர்கள் இனி கைது செய்யப் படாமல் இருப்பதோடு அவர்களை தாக்குபவர்கள் மீது  கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; தமிழக மீனவர் கள் சுட்டுக் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும்; தற்போது சிறையிலிருக்கும் 400க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண் டும்; பிடித்து வைத்துள்ள சுமார் 200 படகுகளை உட னடியாக விடுவிக்க வேண்டும்; மீனவர் பிரச்சனை தொ டராமல் இருக்க ஒன்றிய அரசுடனும்

முக்கியமாக தமிழ்நாடு அரசுடனும் கலந்து பேசிட குழு அமைக்க வேண்டும்; தமிழர்கள் அதிகம் வாழும் இலங்கையின்  வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்கவேண்டும். தமிழ்நாடு அரசு எப்போதும் இல்லாத அளவிற்கு துணை முதல்வர் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் விளையாட்டுத் துறையை வலுப்படுத்தி வருகிறது. திஸா நாயக்கவும் இளை ஞர். இரண்டு நாடுகளிடையே நல்லுறவு திகழ விளை யாட்டு முக்கிய பங்கு வகிக்கும். எனவே தமிழ்நாடு துணை முதல்வருடன் பேசி இருநாட்டு வீரர்களை வைத்து விளையாட்டுப் போட்டிகளை நடத்திட ஆவன செய்ய வேண்டும். இலங்கை ஜனாதிபதி திஸா நாயக்க ஒரு கம்யூ னிஸ்ட். கம்யூனிஸ்டுகள் பார்வை களங்கமற்ற பார்வை யாகவே இருக்கும். இதை நிச்சயம் இலங்கை ஜனாதி பதி பொய்யாக்க மாட்டார் என நம்புகிறோம்.

அத்தகைய இலங்கை ஜனாதிபதி, தமிழக முதல்வ ரோடு நல்லுறவு கொண்டு மீனவர் உள்ளிட்ட பிரச்சனை க்கு தீர்வு கண்டால் அது நிச்சயம் நடக்கும். இலங்கை அரசியலில் அவர் தமிழர்களின் ஆதரவோடு அசைக்க முடியாத தலைவராக நிச்சயம் மிளிர்வார்.  இந்திய ஒன்றிய அரசும் இலங்கையோடு கொண் டுள்ள அணுகுமுறையை சற்று மாற்றிக் கொள்ள வேண் டும். பாஜகவினருக்கு கம்யூனிஸ்டுகள் என்றாலே கசக்கும். இலங்கை ஜனாதிபதி கம்யூனிஸ்ட் என்ப தால், அவரிடம் கசப்பைக் காட்டாமல் உறவை மேம் படுத்த வேண்டும். அது, இந்திய துணைக் கண்டத் தில் புதிய பல வாய்ப்புகளுக்கு கதவுகளைத் திறக்கும்.

கட்டுரையாளர் : V. P. கலைராஜன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்,  தி.நகர், சென்னை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *