சினிமா விமர்சன உலகில் அதிரடியாக கலக்கும் யூடியூப் ரிவியூயராக இருக்கிறார்
சந்தானம் கிஷா.அவர் கலாய்த்த படங்கள் ஒன்றன்பின் ஒன்றாக
தோல்வியடைவதால், நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் தாங்க முடியாமல்
தவிக்கிறார்கள்.இந்நிலையில், ஒரு தியேட்டரின் பின்னணியில் பேயாக மாறிய
இயக்குநர் செல்வராகவன்,ரிவியூயர்களை ‘ஸ்பெஷல் ஷோ’ என அழைத்து
ஒரு மாயப்படம் காட்டுகிறார்.ஆனால் அது படம் இல்லை ஒரு மாய உலகம்!
அந்த தியேட்டருக்கு செல்ல சந்தானம் ஆரம்பத்தில் மறுக்கிறார்.
ஆனால் அவரது குடும்பத்தினர் அங்கு சென்றுவிட,அவர்களை காப்பாற்ற
சந்தானமும் தியேட்டருக்குள் செல்கிறார்.அங்குதான், திரையில் ஓடும்
படம் இவர்களின் வாழ்க்கையை மாற்றி அமைக்கிறது.
அதன் பின் நடைபெறும் அதிரடி சம்பவங்களே இந்தப் படத்தின் மீதிக்கதை
சந்தானம், தனது தோற்றம், உடை, பேச்சு என மாற்றினாலும், நடிப்பில் எந்தவித
மாற்றமும் இல்லாமல் பழைய பாணியிலேயே நடித்துள்ளார். வழக்கமான
நகைச்சுவை அணியினருடன் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்;
இருப்பினும் புதுமை குறைவாகவே உள்ளது. இயக்குநர் பிரேம் ஆனந்த்
“ஹீரோ படம் ஒன்றுக்குள் மாட்டிக்கொள்கிறார்” என்ற யோசனையை
நகைச்சுவையாக சொல்ல முயற்சித்துள்ளார்.
முதல் பாதி ஓரளவு ரசிக்க வைக்குமானாலும், இரண்டாம் பாதி
திகில் நகைச்சுவை என்ற பெயரில் சலிப்பை ஏற்படுத்துகிறது.
கௌதம் மேனன், செல்வராகவன் போன்றோர் நடித்த விதம் கதையுடன்
ஒத்துப்போகவில்லை. திரை விமர்சகர்களை கலாய்த்த இயக்குநர்
“விமர்சனம் ஏதாக இருந்தாலும் படம் ஓடும்” என்ற நம்பிக்கையுடன் முடிக்கிறார்.
ஆனால், அந்த நம்பிக்கை திரையரங்கிற்குள் எவ்வளவு நிலைக்கும் என்பதில் சந்தேகமே.