தி செம்மொழி

தமிழ் செய்தி இணையதளம்

February 2, 2026

No# 1 தமிழ்நாடு செய்தி இணையதளம்

February 2, 2026

தமிழ் செய்தி இணையதளம்

#Delhi சட்டப்பேரவை தேர்தலில் வாக்களித்த தலைவர்கள்!

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபையின் தற்போதைய பதவிக்காலம் வருகிற 23-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனை முன்னிட்டு கடந்த மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அரசியல் கட்சியினர் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கினர். வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வந்தனர். இதற்கிடையே, நேற்று முன்தினத்துடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. இந்த நிலையில், இன்று (பிப்.5) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது

மொத்தம் உள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. 70 தொகுதிகளிலும் மொத்தம் 699 பேர் போட்டியில் உள்ளனர். இதில் ஆம் ஆத்மி, பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. டெல்லியின் முதலமைச்சர் அதிஷி கல்காஜி தொகுதியிலும், முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top