ம.அறிவுச்சுடர்.
வாய்ப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையை தகுந்த நேரத்தில் கிடைத்தால் அதை பயன்படுத்திக் கொண்டு முன்னேற வேண்டும். அனைவருக்கும் முதல் வாய்ப்பு என்பது பொதுவாக அமையக்கூடும். அந்த வாய்ப்பு எது என்னவென்றால் இப்போது தாய்க்கு பிள்ளையாக பிறப்பதற்கும், இரண்டாவது வாய்ப்பு என்பது பள்ளியில் ஆசிரியரிடம் உரிய நேரத்தில் தகுந்த கல்வியை கற்றல் ஆகும். அந்த வாய்ப்பை வீணடித்தால் நாம் எக்காலத்திலும் படிக்க இயலாது. மூன்றாவது வாய்ப்பு என்பது மேற்கூறிய தாய் ஆசிரியர் இந்த இருவரிடமும் இருந்து விளக்கத்தை கற்றல் ஆகும். அவ்வாறு ஒழுக்கம் இருந்தால் எந்த சூழ்நிலையிலும் வெற்றி பெற முடியும். வாய்ப்பு கிடைக்கும் போது அதை நழுவ விடாதே.
இப்போது கொஞ்சம் வரலாற்றில் செவி சாய்ப்போம்.
கெலன் கெல்லர் என்ற ஒரு பெரும் எழுத்தாளர் இருந்தார். அவரின் சோகக் கதை என்னவெனில் அவருக்கு கண் பார்வை, பேசுதல், காது கேட்டல் இந்த மூன்றும் வேலை செய்யாமல் பிறந்தார். அவருக்கு வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்று வெறி இருந்தது. அவருக்கு யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. அப்போதுதான் அவருடைய வாழ்வில் திருப்பம் ஏற்பட்டது. அன்னி என்பவர் ஆசிரியராக வந்தார். இதன் மூலமே கெலனுக்கு கல்விக்கு கற்க முன் வந்தார். பிரெய்லி என்ற கல்வி முறையில் தேர்ச்சி பெற்றார். பின் பெரும் எழுத்தாளராகவும், அரசியல் விமர்சகராகவும் செயலாற்றி சரித்திரத்தில் நாயகராக திகழ்ந்தார். அன்னி என்ற ஆசிரியர் முன்வந்து கெலனுக்கு கல்வி கற்க முன்வரவில்லை என்றால் கெலன் என்பவர் இல்லை. கெலன் அன்னியை உதாசினம்படுத்தாமல் வாழ்க்கையில் ஒரு வழிகாட்டி கிடைத்து விட்டார் என்பதை மனதில் கொண்டு கிடைத்த வாய்ப்பை உரிய நேரத்தில் பயன்படுத்திக்கொண்டார். அதேபோல் வாய்ப்பு என்பது நாம் தேடித் தேடி அலைவதை விட நம்மை தேடி வந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் மேலோங்கி உயர்ந்து சிறந்து செயலாற்றுவோம்.
Leave a Reply