தி செம்மொழி

தமிழ் செய்தி இணையதளம்

February 2, 2026

No# 1 தமிழ்நாடு செய்தி இணையதளம்

February 2, 2026

தமிழ் செய்தி இணையதளம்

`Final destination bloodlines’ படத்தின் டீசர் டிரெய்லர் வெளியானது!

பைனல் டெஸ்டினேஷன் பாகம்-6 படத்தின் டீசர் வெளியானது.

கடந்த 2000-ம் ஆண்டு பிரபல ஹாலிவுட் திகில் திரைப்படமான பைனல் டெஸ்டினேஷன் முதல் பாகம்  வெளியானது. இதில், அலி லார்டர், டோனி டோட், டெவோன் சாவா, கெர் ஸ்மித், சீன் வில்லியம் ஸ்காட் மற்றும் மேரி எலிசபெத் வின்ஸ்டெட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

 

அதனைத்தொடர்ந்து, இதுவரை இதன் 5 பாகங்கள் வெளியாகி உள்ளன. தற்போது ‘பைனல் டெஸ்டினேஷன் பிளட்லைன்ஸ்’ என்ற 6-வது பாகம் உருவாகி உள்ளது. இதில் மறைந்த நடிகர் டோனி டோட், பிரெக் பாசிங்கர். தியோ பிரியோன்ஸ், ரிச்சர்ட் ஹார்மன், குயின்டெசா ஸ்விண்டெல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 

இந்நிலையில், இப்படத்தின் டீசர் டிரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதில், இப்படம் வரும் மே மாதம் 16-ம் தேதி வெளியாகும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top