தி செம்மொழி

தமிழ் செய்தி இணையதளம்

July 27, 2025

No# 1 தமிழ்நாடு செய்தி இணையதளம்

July 27, 2025

தமிழ் செய்தி இணையதளம்

IND VS ENG டி20 கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்!

IND VS ENG டி20 கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான T20 கிரிக்கெட் போட்டி இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டி மாலை 7 மணிக்கு தொடங்கும். ஈடன் கார்டன் மைதானம் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருக்கின்றது, ஆனால் தற்போது பனிக்காலம் என்பதால் பௌலர்களுக்கு பனிப்பொழிவு சவால் அளிக்கும். இதுவரை, மைதானத்தில் முதலில் பௌலிங் செய்த அணிகள் அதிகமாக வெற்றிபெற்றுள்ளன.

இந்திய அணியில் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் மற்றும் அவர் உடன் அக்சர் படேல், அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (வி.கி), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் உள்ளனர்.

இங்கிலாந்து அணியில் கேப்டனாக ஜோஸ் பட்லர் மற்றும் அவரது குழுவில் ஹாரி புரூக், பில் சால்ட், ஜேக்கப் பெத்தேல், லியாம் லிவிங்ஸ்டோன், ரெஹான் அகமது, ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், பிரைடன் கார்ஸ், பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஜேமி ஸ்மித், அடில் ரஷித், சாகிப் மஹ்மூத் ஆகியோர் உள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top