தி செம்மொழி

தமிழ் செய்தி இணையதளம்

January 31, 2026

No# 1 தமிழ்நாடு செய்தி இணையதளம்

January 31, 2026

தமிழ் செய்தி இணையதளம்

KKRvsSRH | கொல்கத்தாவை 110 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹைதரபாத்

ஐபிஎல் லீக் சுற்றின் 68வது போட்டி, பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணிக்கும், அஜிங்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா அணிக்கும் இடையே நேற்று(மே.25) நடைபெற்றது . அருண் ஜெட்லி  மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஹைதராபாத் அணியில், அதிகபட்சமாக  கிளேசென் 105* ரன்களும்,  டிராவிஸ் ஹெட் 76 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெடுகளை மட்டும் இழந்து 278 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 279 என்ற இமாலய இலக்கை கொல்கத்தா அணி சேஸிங் செய்ததது. அதில் அதிகபட்சமாக ஹர்ஷித் ராணா 34 ரன்களும், மனிஷ் பாண்டே 37 ரன்களும், சுனில் நரைன் 31 ரன்களும் அடித்தனர். இதன் மூலம் 20 ஓவர்களில் 168 ரன்கள் அடித்து ஆல் அவுட்டானது. அதன் அடிப்படையில் ஹைதரபாத் அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பந்து வீச்சில் ஜெய்தேவ் உனத்கட், எஷான் மலிங்கா, ஹர்ஷ் துபே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top