3 நாட்களில் ‘கருப்பு’ படம் செய்துள்ள வசூல்..

நடிகர் சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படம் கடந்த 15 ஆம் தேதி ரிலீசானது. உலகமெங்கும் மே 14 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த கருப்பு திரைப்படம் பல்வேறு காரணங்களால் அன்று வெளியாக வில்லை. ஒரு நாள் தள்ளியே வெளியானது.

ஆக்‌ஷன், மாஸ், எமோஷனல் படமாக அமைந்துள்ள கருப்பு திரைப்படம் சூர்யாவின் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்துள்ளது. சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி, இந்திரன்ஸ், சுவாசிகா, அனகா உள்ளிட்டோரின் நடிப்பும் பாராட்டப்பட்டு வருகிறது. சாய் அபயங்கரின் இசை படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.

இந்த நிலையில் கருப்பு திரைப்படம் உலகளவில் ரூ. 147 கோடிகள் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top